(Reading time: 10 - 19 minutes)

யாரது?யாரது?...நீதானா? - தங்கமணி சுவாமினாதன்

ண்டரிபுரம்.பாண்டுரங்கனின் கோயில்.விட்டலனை தரிசிக்க பக்தர்களின் கூட்டம்.தினம் தினம் திரு விழாதான் அங்கு.எப்பொழுதும் பஜனைப் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.அவனை நம்பி வரும் பக்தர்களை விட்டலன் கைவிட்டதே இல்லை.அவனைத் தரிசிக்க ஒருமுறை சென்றுவிட்டால்மீண்டும் மீண்டும் செல்லத்தோன்றும்.இடுப்பில் கைகளை ஊன்றி மந்தகாஸப் புன்னகையுடன் ரகுமாயியோடு நிற்கும் அவனைக் காண கண்கள் கோடி வேண்டும்.

ஷிவ்ராம் செருப்பு தைக்கும் தொழிலாளி.நாற்பதைத் தாண்டியவயது.பாண்டுரங்கனின் கோயில் வாசலில் பல காலமாக செருப்பு தைக்கும் தொழில் செய்பவர்.மிக நேர்மையானவர்.பாண்டுரங்கன் மீது அளவிட முடியாத பக்தி கொண்டவர்.எப்போதும் அவரது வாய் பாண்டுரங்கனின் பெயரை உச்ச்ரிப்பதும் அவன் மீது பாட்டுப் பாடுவதுமாகவே இருக்கும்.ஒரு நாள் வாழ்க்கைக்கான செலவு எவ்வளவு ஆகுமோ அந்த வருமானம் கிடைக்கும் வரைதான் செருப்பு தைப்பார்.அதற்கு மேல் ஒரு ரூபாய்க்குக் கூட தைக்க மாட்டார்.தன்னை நாடி செருப்பு தைக்க வருபவர்களிடம் நியாமான கூலியே கேட்பார்.என்னதான் கடவுள் பக்தியோடும் நியாயம் நேர்மையோடும் ஒருவர் இருந்தாலும் அவரவர் விதிப்படிதானே வாழ்க்கை அமையும்?அப்படி ஒரு வாழ்க்கைதான் ஷிவ்ராமுக்கும் அமைந்திருந்தது.

ருக்குமா ஷிவ்ராமின் மனைவி.நல்ல குணவதி.ஷிவ்ராம் ருக்குமாவின் இல்லறம் நன்றாகவே இருந்தது.வரும் வருமானத்தைகொண்டு மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார்கள்.மகிழ்ச்சியான இல்வாழ்க்கையின் பயனாக ஒரு மகனும் பிறக்கவே அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் கரை புரண்டு ஓடியது.எல்லாம் மகன் பண்டரிக்கு ஐந்து வயது ஆகும் வரைதான்.சாதாரண காய்ச்சலாக வந்தது எந்த மருந்துக்கும் குணமாகாமல் பண்டரியின் இரு கால்களின் இயக்கத்தையும் நிறுத்தி வாய பேச்சினையும் கொள்ளையடித்துக் கொண்டுதான் போயிற்று.

Panduranga
திருச்சியில் இருக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டுரங்கர் ஓவியம்

ஓடியாட வேண்டிய பருவத்தில் கால்கள் விளங்காமலும் பேசமுடியாமலும் படுத்த படுக்கையாகிவிட்ட மகனைப் பார்த்துப் பார்த்து அழுதழுது துக்கம் தாங்காமல் உயிரை விட்டாள் ருக்குமா.தவித்துப் .போனார் ஷிவ்ராம்.இளம் வயதிலேயே மனைவியை இழந்து பிரர் உதவியின்றி வாழமுடியாமல் செயலற்றுப் போன மகனையும் பார்த்துப் பார்த்து மனதிற்குள் அழுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியவில்லை ஷிவ்ராமால்.வீட்டு வேலைகளைச் செய்வதா?மகனைக் கவனிப்பதா?தொழிலைப் பார்ப்பதா?சொல்லமுடியாத துயரத்தில் ஆழ்ந்தார் ஷிவ்ராம்.ஆனாலும் என்ன செய்ய?.. மகனைக் காப்பாற்றி ஆகவேண்டுமே?பலரும் வற்புறுத்தியும் இன்னொரு திருமணம் செய்ய மறுத்துவிட்டார் அவர்.

இவ்வளவு துன்பம் வந்தபோதிலும் பாண்டுரங்கன் மேல் அவ்ர் கொண்ட பக்தி குறையவே இல்லை.

இப்போது பண்டரிக்கு பதிமூன்று வயது.

தங்கக்கலரில் வெகு அற்புதமான கட் ஷூ போன்ற காலணி ஜோடி ஒன்றை தைத்து முடித்தார் ஷிவ்ராம்.பள பளவென மின்னிய அந்த காலணி காண்பவர் மனதைச் சுண்டியிழுக்கும் அழகோடு இருந்தன.அதனை கடைக்கு வருபவர்களின் கண்களில் படுமாறு தன் பக்கத்தில் வைத்துக்கொண்டார்.அப்போதும் கூட  ஷிவ்ராமின் மனமும் வாயும் பாண்டுரங்கனின் பெருமைகளைச் சொல்லும் பஜனைப் பாடலொன்றை சொல்லிக்கொண்டிருந்தன.அப்போது அவர் கடை வாசலில் வண்டியொன்று வந்து நின்றது.அதிலிருந்து அதிக அளவிலான காலணிகள் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்கள் வந்து இறங்கின.ஷிவ்ராம் வாழ்ந்த காலம் மன்னராட்சி காலம் என்பதால் அடிக்கடி போர் மூள்வது வழக்கம்.மூலப்பொருட்களைக் கொண்டுவந்து இறக்கிய ஆட்கள் விரைவில் போர் மூளும் அபாயம் இருப்பதாகவும் போரில் ஈடுபடும் வீரர்களுக்கான காலணிகளைத் தயாரித்துத் தரவேண்டுமென்பது அரசரின் கட்டளை என்றும் அதற்கான கால அவகாசமும் மிகக் குறைவுதான் என்றும் இது எல்லா சக்கிலியர்களுக்கும்(செருப்பு தைப்பவர்) பொருந்தும் என்றும் இப்போது அளிக்கப் பட்டிருக்கும் மூலப் பொருட்களை வைத்து காலணிகளைத் தயாரித்துத் தருவது ஷிவ்ராமின் கடமை என்றும் மீறினால் அரசரால் த்ண்டனை அளிக்கப் படுவார் என்றும் சொல்லிச் சென்றனர்.

குன்றுபோல் குவிந்து கிடக்கும் பொருட்களைப் பார்த்து மலைத்துப் போனார் ஷிவ்ராம். பயம் அவரைஆட்கொண்டது.உதவிக்கு ஆட்கள் வைத்துக்கொள்ளாமல் தனியாகவே தொழில் நடத்தும் நம்மால் ஒண்டி ஆளாய் குறைந்த அவகாசத்தில் குன்று போல் குவிந்து  கிடக்கும் இப் பொருட்களை எவ்வாறு தைத்து முடிப்பது?தவித்துப் போனார் ஷிவ்ராம்.செய்து முடிக்காமல் போனால் அரச தண்டனை கிடைக்குமே?சிறைக்குச் செல்லும்படி நேர்ந்தால் உடல் நிலை சரியில்லாத மகனை யார் பார்ப்பர்?நினைக்கவே பயமாய் இருந்தது அவருக்கு.

பாண்டுரங்கா இது என்ன சோதனை?என்ன செய்வேன் நான்?மனதும் உடலும் சோர்வாய் ஆயிற்று அவருக்கு.பாண்டுரங்கா..பண்டரினாதா..விட்டல்.. விட்டல்...ஜெய்..ஜெய் விட்டல்...பாட ஆரம்பித்தார் ஷிவ்ராம்.

ஐயா..ஐயா..யாரோ கூப்பிடும் குரல் கேட்டு பாட்டை நிறுத்திவிட்டு குரல் வந்த திசை நோக்கித் திரும்பினார்.

அங்கே பத்துப் பணிரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன்.மெலிந்த தேகம் வாடிய முகத்தோடு நின்று கொண்டிருந்தான்.

என்னப்பா?

ஐயா..மிகவும் பசிக்கிறது..சாப்பிட ஏதாவது கொடுக்க முடியுமா..

அச் சிறுவனைப் பார்க்க மிகவும் பாவமாக இருந்த்து ஷிவ்ராமுக்கு.மதியம் உண்பதற்காக வைத்திருந்த இரண்டு சப்பாத்திகளை எடுத்து அவனிடம் நீட்டினார் ஷிவ்ராம்..இந்தாப்பா சாப்பிடு...

ஐயா..

ஏனப்பா உனக்கு சப்பாத்தி பிடிக்காதா?கேட்டார் ஷிவ்ராம்..

அப்படியொன்றுமில்லை ஐயா..ஆனால்...

சொல்லு தம்பி..

ஐயா எனக்கு வேலை ஏதாவது கொடுங்கள் ஐயா..அதைச் செய்து முடித்து விட்டு சப்பாத்தியைப் பெற்றுக் கொள்கிறேன்..

லேசாகச் சிரித்தார் ஷிவ்ராம்..இந்த இரண்டு சப்பாத்திகளுக்காக உன்னிடம் என்ன வேலை வாங்குவது?உனக்கு வேலை தருமளவுக்கு இங்கு ஒன்றும் வேலை இல்லையே தம்பி..

ஐயா...உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நான் செருப்பு தைக்கும் வேலை செய்கிறேனே?

அந்த வேலை தாருங்கள் ஐயா..

என்னப்பா சொல்கிறாய்? நீ செருப்பு தைப்பதா?பழக்கமில்லா ஒரு வேலையை எப்படிச் செய்வது?

செருப்பு தைப்பது அவ்வளவு எளிதான வேலை இல்லை தம்பி..

ஐயா.தயவுசெய்து...மறுக்காதீர்கள்...என்னை அனுமதியுங்கள்..

எதுவும் சொல்லாமல் மௌனமாகிறார் ஷிவ்ராம் ..

மள மளவென்று வேலையை ஆரம்பிக்கிறான் அந்தச் சிறுவன்.சட்டென அவன் பார்வை ஷிவ்ராமின் பக்கத்தில் வைக்கப் பட்டிருந்த தங்கநிற காலணியின்மீது படுகிறது.

ஐயா...அதோ அந்த தங்க நிறக் காலணிகள் கண்களைப் பறிக்கின்றது ஐயா..மிக அழகாக இருக்கின்றன..

தம்பி..உனக்கு அவை பிடித்திருந்தால் நீயே அதனை எடுத்துக்கொள்ளேன்..இந்தா எடுத்துக்கொள்.

மின்னும் அந்த காலணிகளை எடுத்து நீட்டினார் ஷிவ்ராம்.

இருக்கட்டும் ஐயா...அந்தக் காலணிகளை நான் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் கூடுதலாக பணி செய்ய என்னை அனுமதிக்க வேண்டுமையா..

இப்பொழுதும் மௌனமாக இருந்தார் ஷிவ்ராம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.