(Reading time: 4 - 7 minutes)

வாருங்களேன் கொஞ்சம்...ஆன்மிகப் பக்கமும் - குருவே சரணம் - 02 - தங்கமணி சுவாமினாதன்

Kanchi Mahaa Periyavar

ஷ்டமே வராமல் இருக்க என்ன வழி சொல்கிறார் காஞ்சி ஸ்ரீ மகா பெரியவா.. பார்ப்போமா?...

மனிதனுக்கு மிக அவசியமாக வேண்டியவை மூன்று.உண்ண உணவு,உடுக்க உடை, உறங்க உறைவிடம். இந்த மூன்றையும் பெறுவதற்காக அவன் சம்பாதிப்பதை விட அதிகமாக சம்பாதித்தால் அந்த மிகுதியான பொருள் அவனின் குழந்தைகளை ரக்ஷிக்கவும்,அவர்களுக்குக் கல்வியைத்தரவும் விவாஹம் முதலியவற்றைச் செய்யவும் உபயோகமாய் இருக்கின்றன.

இப்படி மனிதன் தனக்காகவும் தன்னைச் சார்ந்தவர்களுக்காகவும் செய்யவேண்டிய காரியங்களைத் தவிற வேறு பல விசித்திரமான காரியங்களையும் செய்து வருகிறான்.

அது என்ன விசித்திரமான வேலை என்று கேள்வியை எழுப்பும் மகா பெரியவா இப்படிச் சொல்கிறார்..

ஒருவன் சிலுவை என்ற ஒன்றை வைத்து சர்ச் என ஒன்றைக் கட்டிக்கொள்கிறன். அங்கே இவனின் பசியைப் போக்க்க் கூடிய பதார்த்தம் ஒன்றுமே கிடையாது.

இன்னொருத்தன் ருத்திராட்சம் அணிந்து கொண்டு உடல் உழுது விபூதியைப் பூசிக்கொள்கிறான். இதனால் அவன் வயிற்றுக்கும் பிரயோசனமில்லை, வஸ்த்திரத்துக்கும் பிரயோசனமில்லை.ஏதொ ஒரு பஞ்ச பாத்திர உத்தரணியை வைத்துக்கொண்டு அடித்து அடித்து சப்தம் செய்கிறான்.இதனால் அவனுக்கோ அவனைச் சார்ந்தவர்களுககோ  துளியும் பிரயோசனமில்லை.அந்தன் மலையிலிருந்து கல்லைக் கொண்டு வந்து கோயில் எழுப்புகிறான்.ஆனால் அவனால் இரவில் அங்கு படுத்து உறங்கமுடியாது..பூட்டப் பட்டு விடும்.

சிலர் மதம் மதம் என்று சொல்லி தமக்குள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.பஜனை மடம் கட்டி கத்திக் கத்தி பாடி தொண்டைக்கும் உடலுக்கும் தொல்லை கொடுக்கிறார்கள்.இதையெல்லாம் பார்க்கும் போது இவை அவசியமில்லா அதிகப்படியான காரியங்களாக தோன்றவில்லையா?

இவை அவசியம்தானா/ஏன் இவற்றைச் செய்ய வேண்டும்?இதனால் கிடைக்கும் பயன் என்ன?

மனிதன் எதற்காக சம்பாதிக்க வேண்டும்.அன்றைய பசிக்கு சத்திரம் சாவடிக்குப் போய் சாப்பிட்டால் பொதுமே?எதற்கு சம்பாதிக்க ஏண்டும் என்று மனிதன் நினைப்பதில்லை.

ஒருனாள் சாப்பிட்டால் போதுமே..மறுனாள் சாப்பாட்டிற்கு இப்போதே என்ன கவலை என்று நினைப்பதில்லை.நாளைக்கு முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது இன்றைக்கே அதற்காக பொருளீட்டி வைத்துக்கொள்வோம் என்று நினைக்கிறான்.

அப்படி ஈட்டும் பொருள் எவ்வளவு நாட்கள் வரும்..நம் உடம்பு உள்ளவரைதான் இது உதவும்.நம் உடம்புக்குதான் சாவு.ஆன்மாவுக்குக் கிடயாது.அது மீண்டும் பிறவி எடுக்கும்.எந்தப் பிறவியாய்ப் பிறக்கிறாய் என்பது நீ மனிதனாய் வாழ்ந்தபோது செய்த செயல்களை வைத்தே அமைகிறது.எனவே இப்பொதே நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் மீண்டும் பிறக்கையில் அல்ல பிறவி துன்பமில்லா வாழ்வு அமையும்.

சிலர் கேட்பார்கள் அவன் ஒரு அயோக்கியன் ஆனால் அவன் ராஜ வாழ்க்கை வாழ்கிறான்..நான் பாவபுண்ணியத்துக்கு அஞ்சி வாழ்பவன் ஆனால் மிகவும் கஷ்டப்படுகிறேனே அது ஏன் என்பார்கள்.அவன் முற்பிறவியில் செய்த நற்செயல்களே இப்பிறவியில் அவன் அயோக்கியனாக இருந்தாலும் ராஜ வாழ்வைத் தந்திருக்கிறது.

நீ உன் முற்பிறவியில் செய்த செயல்களே உன் இப்போதய வாழ்க்கைக்கு காரணமாயிருக்கும்.

எனவே இப்போதே நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும்.பிற்கால வாழ்க்கைக்கு இன்ஷூர் செய்துகொளவதைப் போல பின்வரும் பிறவிக்காக நற்செயல் செய்ய வேண்டும்.

நற்செயல் என்றால் என்ன?நம்மின் மனம் வாக்கு காயம் என்ற மூன்றினாலும் செய்யப்படும் காரியங்கள் எல்லாம் நீதி வழுவாத,தர்ம காரியங்களாய் இருக்க வேண்டும்.அப்படிச் செய்யும் தர்மம் எப்பொழுதும் எவ்விடத்திலும் செல்லும்.மனிதன் எப்பொழுது மேலே உயர்வதற்கான செயல்களையே செய்ய வேண்டும்.

மனிதன் மட்டுமே மேல் நோக்கி வளரக் கூடியவன்.மற்ற ஜீவராசிகள் அப்படியில்லை.மனிதன் உயர்தவன் என்பதையே இது காட்டுகிறது.எனவே மனிதன் உயர்ந்த செயல்களையே செய்ய வேண்டும்.தர்மம் வழுவாது வாழ வேண்டும்.அத் தர்மத்தைத் தைரியமாகவும் நியமத்துடனும் செய்து வந்தால் நமக்கு ஒருபோதும் கஷ்டம் என்பதே வராது.அந்த தர்மம் எப்போதும் மேலான சௌக்கியத்தையே கொடுக்கும்.இதில் சந்தேகமே வேண்டாம்.

காஞ்சி முனிவர்...அந்த கருணைக் கடல்.. சொல்லிய இந்த வழியை நாம் பின்பற்றி வாழ்க்கையில் உயர்வோமே..

படித்ததில் பிடித்தது..பிடித்ததை வடித்தது..வடித்ததை (டைப்)அடித்தது..அடித்ததை உங்கள் பார்வைக்கு வைத்தது நானாக இருந்தாலும் தளம் அமைத்துக் கொடுத்தது சில்சீ..நன்றி சில்சீ....

இன்னும் வரும்...

இதனைப் படித்தவர்களுக்கு நன்றி..நன்றி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.