(Reading time: 5 - 9 minutes)

அர்ஜுனன் கர்வ பங்கம்... - தங்கமணி சுவாமினாதன்

Arjun

ண்ணனைத் தன் நண்பனாகக் கொண்ட அர்ஜுனனுக்கு மிகுந்த கர்வம்.கண்ணனோடு தமக்கிருக்கும் அன்பைப்போலும் சினேகத்தைப் போலும் வேறு யாருக்கு உண்டு?கண்ணன் மீது தான் வைத்திருக்கும் பிரேமையே சிறந்தது.மற்றவர்களது தனதை காட்டிலும் குறைவானதே என எண்ணி அதன் காரணமாய் கர்வம் கொண்டிருந்தான் அர்ஜுனன்.கண்ணனுக்குத் தெரியாதா இவன் கர்வம்?

ஒரு நாள் கண்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.அப்போது வழியில் பிராமணர் ஒருவர் காய்ந்து சருகாகிப்போன புல்லைத் தின்றுகொண்டிருப்பதைக் கண்டனர்.அவர் இடுப்பில் கூரிய கத்தி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது.அவர் காய்ந்த புல்லைத் தின்று கொண்டிருப்பதைக் கண்ட

அர்ஜுனனுக்கு மிகவும் வியப்பாய் இருந்தது.கண்ணனிடம் இது பற்றிக் கேட்டான் அர்ஜுனன்.கண்ணா இது என்ன விந்தை?இந்த பிராமணர் ஏன் இப்படி காய்ந்த புல்லைத் தின்கிறார்?புல்லைத் தின்ன வேண்டுமென நினைத்தால் பசுமையான புல்லைத் தின்னக்கூடாதா?ஒரு வேளை இவர் பசுமையான புல்லுக்கும் உயிருண்டு அதைத்தின்பதன் மூலம் அவ்வுயிருக்கு தீங்கு செய்பவன் ஆகிவிடுவோமென எண்ணி இவ்வாறு

உயிற்ற காய்ந்த புல்லைத் திங்கிராறா?அப்படி அவர் எந்த உயிருக்கும் தீங்கு செய்தல் கூடாது என எண்ணுபவராயின் பிற உயிர்களை அச்சுறுத்தி தீங்கு விளைவிக்கக் கூடிய கத்தியைத் தம்மிடம் வைத்துள்ளாறே?அதற்கு என்ன காரணம் என்று வினவினான்.வழக்கம் போல் சிரித்துக் கொண்டார் கண்ணன்.

அர்ஜுனா..உனது சந்தேகத்திற்கான விடையை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளேன் என்றார் கண்ணன்

அதுவும் சரிதான் கண்ணா என்றபடி...அப்பிராமணரிடம் சென்ற அர்ஜுனன்..பிராமணரே..காய்ந்த புல்லைத் தின்னும் நீர் பசுமையாய் இருக்கும் உயிருள்ள புல்லைத் தின்றால் அது உயிருள்ள அப்புல்லுக்கு ஹிம்சை தருவதாகும் என்று எண்ணுகிரீறா?எந்த உயிருக்கும் தீங்கு செய்தல் ஆகாது என நீர் எண்ணுதல் உண்மையெனில் உயிர்களுக்கு ஹிம்சைதரும் கத்தியை உமது இடுப்பில் வைத்திருப்பதற்கான காரணம் யாது?..சொல்வீர்..எனப் பணிவாகக் கேட்டான்.

அப்பிராமணர் சொன்ன பதில் கேட்டு அதிர்ந்து நின்றான் அர்ஜுனன்.

யிர்களுக்கு ஹிம்சை தரும் கத்தியை உமது இடுப்பில் வைத்திருப்பதற்கான காரணம் யாது?என அர்ஜுனன் வினவியதும் முகமே மாறிப்போயிற்று அந்த பிராமணருக்கு.

சட்டென அவரது வலது கை இடுப்பில் இருந்த கத்திக்குச் சென்றது.பற்களை நற நற வென்று கடித்த அவர் ஆவேசமாய் பேசலுற்றார்.

நான் துஷ்டர்கள் இருவரைத் தண்டிப்பதற்காகவே இக்கத்தியை என்னுடன் வைத்திருக்கிறேன்.அவர்கள் மட்டும் என் கண்களில் பட்டால் அவ்வளவுதான்..அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.அவ்விருவரையும் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.இன்னும் அவர்கள் என் கண்களில் படவில்லை.அதனாலேயே இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.தினம் தினம் இக்கத்தியைத் தீட்டித் தீட்டி வைக்கிறேன்.என்றாவது ஒரு நாள் அவர்கள் என் பார்வையில் படாமலா போய்விடுவார்கள்?அப்போது அவர்களை..அவர்களை..கோபத்தில் பிராமணரின் கண்கள் சிவந்தன.

அவரின் கடுங்கோபம் அர்ஜுனனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பிராமணரே...அவர்கள் இருவரும் யார்?அவர்கள் மீது நீங்கள் இவ்வளவு கோபம் கொள்ளக் காரணம் யாது?அப்படி அவர்கள் என்ன தவறு செய்து விட்டாரகள்?எனக் கேட்டான்.

அவர்கள் இருவரும் யார் என்றா கேட்கிறீர்கள்?சொல்கிறேன் கேளும்.

துஷ்டர்கள் இருவரில் முதலாமவர்...பிரம்மனின் புத்திரன் நாரதன்...

என்ன நாரதரா..?

ஆம் அவனேதான்..

அவர் என்ன செய்தார்?..

அவன் என்ன செய்தானா?ஹே..அவன் பாடும் பாட்டினாலும்..இசைக்கும் வீணையின் சப்தத்தினாலும்.. ஜகத் ரட்சகன் ஜகன்னாதனுக்கு ஒரு நிமிஷம் கூட நித்திரை கிடையாது.பகவானின் சௌக்கியத்தை சிறிதும் எண்ணாமல் வீணையை மீட்டிக்கொண்டு சதா நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டு அவரின் நிம்மதியையும், நித்திரையையும் கெடுக்கும் நாரதன் மட்டும் என் கண்களில் பட்டால் இந்தக் கத்தியாலேயே அவனை..அவனை..

பிராமணரின் கோபம் கண்டு அர்ஜுனனுக்கு..வியப்பாய் இருந்தது..

சரி போகட்டும் பிராமணரே..அந்த இரண்டாவது நபர் யார்..?

இரண்டாவது நபரா?..அவள்..அவள்..அந்த கர்வம் பிடித்த திரௌபதி..

அதிர்ந்து போனான் அர்ஜுனன்..

ஐயோ..திரௌபதியா? பாவம் அவள்..அவள் என்ன செய்தாள் நீங்கள் இந்த அளவு கோபம் கொள்ள..?

அவள் என்ன செய்தாளா?அந்தக் கர்வம் பிடித்தவள் என்ன செய்தாள் தெரியுமா?துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து பாண்டவர்களைக் காப்பாற்ற காம்ய வனத்திற்கு கிருஷ்ணரை அழைக்க அவரும் இவள் அழைக்கிறாளே என்று தான் சாப்பிடத் துவங்கிய நேரத்தில் சாப்பிடவும் இல்லாமல் பட்டினியாய் செல்ல அங்கு அவர்கள் அனைவரும் உண்டபின் சட்டியில் மிச்சமிருந்த ஒரு பருக்கையை அல்லவா பகவானை உண்ண வைத்தாள்?மிச்சப்பட்ட பருக்கையை கிருஷ்ணரை உண்ணவைத்த அந்த கர்வம் பிடித்த திரௌபதியை என்ன செய்தால் தகும்?அவளைத் தண்டிக்காமல் விடலாமா?அவளை நேரில் கண்டால்

அவளை..அவளை இக் கத்தியால் அப்படியே கண்டந்துண்டமாக...என்று சொல்லியவரின் கண்கள் மீண்டும் சிவந்தது கோபத்தில்..கை கத்தியை இறுகப் பற்றியது.

அவரின் கிருஷண பக்தியைக் கண்டு அப்படியே அசந்து போய் நின்றான் அர்ஜுனன்.

கிஷ்ணரோடு கொஞ்சமும் பழகியிராத.. ஏன் அவரைப் பார்த்தே இராத அந்த பிராமணரின் பக்திக்கு முன் தான் கிருஷ்ணர் மீது வைத்திருக்கு சினேகமும் பக்தியும் எம்மாத்திரம் என்று வெட்கிப்போனான் அர்ஜுனன்.அவன் கர்வம் அழிந்தது.அகந்தை அழிந்து வெட்கி நிற்கும் அர்ஜுனனைப் பார்த்து மனதிற்குள்

சிரித்துக் கொண்டார் கண்ணன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.