search icon
என் மலர்tooltip icon
    • கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் அரை சதம் அடித்து அசத்தினார்.
    • ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் - குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

    இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஐதராபாத் அணி தோல்வியடைந்தது.
    • கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.

    இந்நிலையில் ஐதராபாத் அணியின் தோல்வியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தப்படியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்..

    அவர் ஐதராபாத் அணி பேட்டிங் செய்யும் போதே சோகமடைந்து உட்கார்ந்து இருந்தார். இறுதியில் தோல்வியடைந்ததால் வேதனை தாங்காமல் அழுதார். இதனை பார்த்த ரசிகர்கள் கஷ்டமாக உள்ளது என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    காவ்யா மாறனை பார்ப்பதற்காக கூட நிறைய ரசிகர்கள் ஐதராபாத் போட்டியை பார்த்ததாக மீம்ஸ்கள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார்.
    • 'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

    சென்னை புரசைவாக்கத்தில் அனைத்திந்திய பாங்க் ஆப் பரோடா ஓ.பி.சி. தொழிலாளர்கள் நலன் கூட்டமைப்பின் சார்பில், 8-வது 'ஓ.பி.சி. அனைத்திந்திய கருத்தரங்கம்' நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

    கருத்தரங்கிற்கு பிறகு அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி அண்மைக் காலமாக பேசி வரும் கருத்துக்கள் யாவும் அவர் பதற்றத்திலும், தோல்வி பயத்திலும் இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

    குறிப்பாக காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் இந்துக்களின் தாலியை பறித்து இஸ்லாமியர்களிடம் கொடுத்துவிடுவார்கள் என்றும், அயோத்தி ராமர் கோவிலை இடித்து விடுவார்கள் என்றும் பா.ஜ.க.வினர் பேசி வருவது அவர்களின் பதற்றத்தைக் காட்டுகிறது.

    'இந்தியா' கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பிரதமர் மோடிதான் குழப்பத்தில் இருக்கிறார். 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்தவர்கள் ஆண்டுக்கு ஒரு பிரதமரை உருவாக்கப் போகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். அவ்வாறு இருப்பதில் என்ன தவறு?

    'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒருமித்த கருத்தோடு ஆண்டுக்கு ஒரு பிரதமரை வைத்தாலும் ஆட்சி நிர்வாகம் கட்டுக்கோப்பாக இருக்கும். அதுவும் ஒரு ஜனநாயக முறையிலான முன்னெடுப்புதான். ஆண்டுக்கு ஒரு பிரதமர் வருவதில் தவறே இல்லை. அப்படி ஒரு நடைமுறை வந்தால் அதை வரவேற்கவும், அங்கீகரிக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்."

    இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

    • இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிப்பு.
    • கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    டெல்லி மருத்துவமனை தீ விபத்து விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தகுதியில்லா மருத்துவர்களை கொண்டு செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது.

    ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் பணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவிகள் இல்லை என்பதும் எமர்ஜென்சி எக்ஸிட்களும் மருத்துவமனை நிர்வாகத்தால் திறக்கப்படவில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட உரிமம் மார்ச் 31ம் தேதியோடு காலாவதியாகி உள்ளது.

    கைது செய்யப்பட்ட உரிமையாளருக்கு டெல்லியில் இதுபோன்ற 3 கிளினிக்குகள் உள்ளன.

    5 படுக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சம்பவத்தின்போது மருத்துவமனையில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சம்பவம் தொடரபாக உரிமையாளர் கைது செய்யப்பட் நிலையில் மருத்துவமனை இயக்குனராக டாக்டர் நவீன் கிச்சி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் இறுதிபோட்டியில் குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது. இதற்கு முன்பு 2013-ம் ஆண்டில் சென்னை - மும்பை அணிகள் மோதிய ஆட்டத்தில் சென்னை அணி 125 ரன்கள் எடுத்ததே குறைந்த பட்ச ரன்களாக இருந்தது. அதனை தற்போது ஐதராபாத் அணி முறியடித்துள்ளது.

    இறுதிப்போட்டியில் குறைந்த பட்ச ரன்கள் எடுத்த அணிகள் விவரம்:-

    113 ஐதராபாத் vs கொல்கத்தா - சென்னை 2024 *

    125/9 சென்னை vs மும்பை - கொல்கத்தா 2013

    128/6 புனே vs மும்பை - ஐதராபாத் 2017

    129/8 மும்பை vs புனே - ஹைதராபாத் 2017

    • இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.
    • விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கத்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான கியூ.ஆர். 017 என்ற விமானம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து இன்று மதியம் 1 மணியளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் போது துருக்கி நாட்டின் மேலே சென்றபோது, இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.

    இதில் விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து விமானம் டப்ளின் நகரில் தரையிறங்கியது. விமானம் நடுவானில் குலுங்கிய தகவல் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விமான நிலையதில் இருந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காயமுற்ற பயணிகளுக்கு உதவினர். முன்னதாக லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் இதேபோன்று நடுவானில் குலுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 73 வயது முதியவர் உயிரிழந்தார். 

    • ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் - கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். தொடக்கமே ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

    அபிஷேக் 2 ரன்னிலும் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதனை தொடர்ந்து வந்த திருப்பாதி முதலில் பவுண்டரிகளை விளாசினார். பின்னர் சொதப்பிய அவர் 13 பந்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இதனை தொடர்ந்து மார்க்ரம் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சிறிது நேரம் தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நிதிஷ் ரெட்டி 13 ரன்னிலும் மார்க்ரம் 20 ரன்னிலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த ஷபாஷ் அகமது 8 ரன்னிலும் அப்தும் சமாத் 4 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் 77 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் அணி திணறியது. ஒரே நம்பிக்கையாக இருந்த கிளாசனும் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் ஒற்றை ஆளாக போராடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாக தகவல்.
    • பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. இந்திய அணிக்கு அடுத்த தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும், அடுத்த தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்களை பி.சி.சி.ஐ. பெற்று வருகிறது.

    இந்த பதவியில் சரியான நபரை தேர்வு செய்வதற்காக பி.சி.சி.ஐ. பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில், கவுதம் காம்பீரை கொல்கத்தா அணியில் இணைய வேண்டும் என்று ஷாருக் கான் கேட்டுக் கொண்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், கொல்கத்தா அணியுடன் பத்து ஆண்டுகள் பயணிக்க வேண்டும் என்று கூறி தற்போது கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு வரும் கவுதம் காம்பீருக்கு தொகை எழுதப்படாத காசோலையை ஷாருக் கான் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களில் கவுதம் காம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தன்னை தலைமை பயிற்சியாளராக நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றால் விண்ணப்பிக்க அவர் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஒருவேளை பி.சி.சி.ஐ. கவுதம் காம்பீரை பயிற்சியாளர் குழுவில் ஒருவராக நியமிக்க நினைத்தால், பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிலையில்தான் கவுதம் காம்பீர் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைமை பயிற்சியாளர் பதவியை கவுதம் காம்பீருக்கு வழங்கும் பணிகளில் பி.சி.சி.ஐ. தீவிரம் காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாருக் கான் கவுதம் காம்பீரை தனது அணியில் நீண்ட காலம் பணியாற்ற வைக்க விரும்பியதாக தெரிகிறது. இதற்காகவே அவர் கவுதம் காம்பீருக்கு தொகை நிரப்பப்படாத காசோலையை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து ஏராளமான பெயர்கள் வெளியான நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், "பி.சி.சி.ஐ. மற்றும் நான் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ஆஸ்திரேலிய வீரர்கள் யாரையும் அணுகவில்லை. இது தொடர்பான வெளியான தகவல்கள் எதுவும் உண்மையில்லை," என்று தெரிவித்தார்.

    இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக வேண்டும் என்று கவுதம் காம்பீர் விரும்பினாலும், அவருக்கும் ஷாருக் கானுக்கும் இடையில் இது தொடர்பாக என்ன உரையாடல் நடைபெற்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ளது.
    • கொல்கத்தாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    வங்கக்கடலில் உருவான ரீமால் புயல் அதி தீவிர புயலாக வலுவடைந்த நிலையில், இன்று இரவு மேற்கு வங்காளம் சாகர் தீவுகளுக்கும், வங்கதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே கரையை கடக்க உள்ளது.

    புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையத்தில் தங்களின் செயல்பாடுகளை நிறுத்துவதாக விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், ரீமால் புயலை எதிர்கொள்ளும் வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இன்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    • காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
    • இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி.

    ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் இந்தாண்டு நான்கரை லட்சம் மரங்கள் விவசாய நிலங்களில் நடப்பட உள்ளது.

    இதன் தொடக்க விழா திருச்சி தில்லை நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் இன்று (மே 26) காலை நடைபெற்றது. 

    இவ்விழாவில் தமிழ்நாடு நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களும் கலந்து கொண்டார்.

    விழாவின்போது அமைச்சர் கே.என். நேரு அவர்கள் விழாவில் பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா நிறுவனர் சத்குருவுடன் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மரம் நடும் விழாவில் அப்போதைய முதல்வர் கருணாநிதி அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஈஷாவின் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அந்த விழாவில் கலைஞர் பேசும் போது, 'நாம் மரத்தை வளத்தால்; மரம் நம்மை வளர்க்கும்' என்று ஒரு அற்புதமான வாசகத்தை சொன்னார். 

    அந்த வாசகத்துடன் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஈஷாவின் மரம் நடும் திட்டத்தின் மூலம் இதுவரை 10.9 கோடி மரங்கள் நடப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஈஷாவின் மரம் நடும் பணிகள் மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    விவசாயிகள் மர வேலைப்பாடுகளுக்கு தேவைகளுக்கான மரங்கள் மட்டும் இன்றி பழ வகை மரங்களை அதிகம் நட வேண்டும். அவகோடா போன்ற பழ மரங்கள் விவசாயிகள் பெரும் வருவாயை தருகிறது. பழ மரங்கள் நடுவதன் மூலம் உணவு உற்பத்தியையும் அதிகரிக்கும்.

    தமிழ்நாடு முழுவதும் வேலை ஆட்கள் இன்றி தரிசாக மாறி வரும் விவசாய நிலங்களில் எல்லாம் மரங்கள் நட வேண்டும். மரங்கள் நடுவது நாட்டுக்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நல்லது. மரம் நடும் பணியோடு மட்டுமின்றி ஏரிகளை தூர்வாரி அதை செப்பனிடும் பணியிலும் ஈஷா இயக்கம் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுகிறேன். இந்த அற்புதமான நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிக்க மகிழ்ச்சி" என கூறினார். 

    முன்னதாக, ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா பேசுகையில், "காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் நடப்பு நிதியாண்டில் (2024-25) தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 21 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் நடும் பணியை தற்போது தொடங்கி உள்ளோம். திருச்சி மாவட்டத்தில் மட்டும் இந்தாண்டு 4.5 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். கடந்தாண்டு திருச்சியில் 2,92,773 மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டுள்ளனர்" என்றார்.

    2002-ம் ஆண்டு முதல் ஈஷா சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    ×