அர்த்தம் புரிந்தது!
குயிலின் ஓசை கேட்டேன்
இசையின் அர்த்தம் புரிந்தது!
மழலையின் பேச்சை கேட்டேன்
முயற்சியின் அர்த்தம் புரிந்தது!
நான் தோற்றுப் போன சமயங்களில்
அன்னையின் கண்ணில் அழுகை பார்த்தேன்
அன்பின் அர்த்தம் புரிந்தது!
எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பினை கண்டேன்
நட்பின் அர்த்தம் புரிந்தது!
சோகத்திலும் சுகத்தை அனுபவித்தேன்
காதலின் அர்த்தம் புரிந்தது!