(Reading time: 1 - 2 minutes)

 

தெரிந்துக் கொள்ளாமல் போய் விட்டிரே!

 

பொய்களை அடுக்கும்

அரசியல்வாதியை -விரட்டி

அடிக்க முடியவில்லை!

 

எட்டுக்கட்டையில் இலக்கியம்

பேசுவோரை நிறுத்தும்

என்று சொல்ல துணிவு வரவில்லை!

 

எப்போதுமே குறைத்து பேசுவோரை

எழுந்து நின்று மூக்கை

உடைக்கும் வலிமையில்லை!

 

சுதந்திர நாடாம்-சுதந்திரமாக

பிடித்ததை செய்யும் உரிமைக்கு

உரிமையில்லை!

 

அகிம்சையில் சுதந்திரம்

வாங்கி தந்தவரே- அதற்க்கு

நாங்கள் வக்கற்றவர்கள்..

தெரிந்துக் கொள்ளாமல் போய்விட்டிரே!

 

முன்னூறு ஆண்டு

அடிமை பழகியதால்-பணிந்தே

கிடந்ததால் இன்றும் அடிமையாக

தான் உள்ளோம் கிழவரே!

 

கௌரவமாக சாயம் பூசி

ஏவியதை செய்துக்கொண்டு

இருக்கிறோம்!-கேட்டால்

டெக்னாலஜி என்போம்!

 

அப்பாவுக்கு மருந்து

வாங்க நேரமில்லை..

அம்மாவுடன் கோயிலுக்கு

செல்ல நேரமில்லை..

வெள்ளையனுக்கு வேலை

செய்து கொடுத்து கொண்டிருப்பதால்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.