காற்று - என் தோழன்
பஞ்ச பூதங்களுக்கும் எனக்கும்
சண்டை காற்றே !
உன்னை மட்டும் நான் விரும்புவதால்
நீர் இருக்கிறது அது இல்லையென்றால்
ஐந்து ரூபாய் கவர்களில் வாங்கி விடலாம்
நிலம் இல்லை யென்றால் கூட
நிலாவில் வீடு கட்டலாம் என்கிறார்கள்
அனால் நீ இல்லை என்றால்
நான் இல்லை என் அன்பே
ஆகாயம் இருக்கிறது ஆனால்
அது ஆசுவாசமாக என்னுடன் விளையாட
வருமா உன்னை போல ?
நெருப்பும் இருக்கிறது ஆனால்
அதனிடம் என்னால் விளையாட முடியுமா ?
உன்னிடம் நான் விளையாடுவது போல ...........