(Reading time: 1 - 2 minutes)

உங்கள் நலத்தை பேணுங்கள் - சுமதி

Drive carefully

மற்றவர்களுக்காக ஆனந்த யாழை மீட்டநீர்கள்

ஆனால் உங்களுக்கு அசுப யாழை மீட்டிவிட்டீர்களே

அப்பாவுக்கும் மகளுக்குமான பாசத்தை மற்றவர்களுக்கு புரியவைத்தீர்கள்

ஆனால் உங்கள் தங்க மகளுக்கு 

அந்த புரிதலை ஏன் தரவில்லை

சில நிமிடங்களில் கவிதை எழுதும்

திறமை பெற்று இருந்தீர்களாம்

ஆனால் ஒரு நொடி உங்கள் 

உடலை கவனித்து இருந்திருக்கலாம்

ஏனென்றால் உங்கள் திறமை 

உங்கள் குழந்தைகோ மனைவிக்கோ தேவையில்லை நீங்கள் தான் தேவை

 

அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?

உனது புன்னகை போதுமடி என

நீங்கள் போய்விட்டீர்கள்

இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே

என்றும் வாழவில்லை என்று தோன்றுதடி

என்ற மனநிறைவோடு சென்றுவிட்டீர்கள்

ஆனால் நாங்கள் காலத்தின் கட்டாயத்தால்

மனக்குமறலோடு நின்றுவிட்டோம்

உங்கள் வெளியுலக தொடர்புகள் இன்றோடு முடிந்தது

ஆனால் உங்கள் உலகமான குழந்தை,மனைவி ஒவ்வொரு நொடியும் நினைவுகளோடு வாழ்வார்கள்

நண்பர்களே/ நண்பிகளே 

உங்களுடைய உடல் நலத்தை பேணுங்கள்

கவனமுடன் வாகனத்தை இயக்குங்கள்

உங்களுடைய உலகத்தை சிதறடித்து விடாதீர்கள்

ஏனென்றால் மற்றவர்களுக்கு செய்தி

உங்கள் குடும்பத்துக்கோ உலகம்

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.