(Reading time: 1 - 2 minutes)

ஓட்டப்பந்தயம் - மது

அலுத்துக் கொண்டேன் விடியலை.....

இன்னொரு ஓட்டப்பந்தயம்!!

 

கடிகார முள்ளோடு போட்டிப் போடும்

காலை நேரத்தின் என் ஓட்டம்

கணினி கூடத் தோற்றுப் போகும்!!

 

பொங்கி வழியும் போக்குவரத்தோடு

கபடி ஆடிய வெற்றிக் களிப்புடன்

வியர்வை குளியல் இலவச இணைப்பு!!

 

பிடித்த விளையாட்டு பம்பரம் விடுவது

என்று வேடிக்கையாய் சொன்னதிற்கு இன்று

சுழல்கிறேன்  அலுவல் கயிற்றினுள்!!

 

அந்தி மாலைப் பொழுதின் ஆனந்தமே

எனக்கு மட்டும் ஏன் ஒர வஞ்சகம்

 காத்திருக்கும் வீட்டுத் தலைவி அவதாரம்!!

 

அடைக்கலம் புகுந்தேன் நித்திரைக்குள்

நிம்மதியான என் நிமிடங்களை

நசுக்கிய அலாரம் சத்தம்!!

 

அலுத்துக் கொண்டேன் விடியலை...

இன்னொரு ஓட்டப்பந்தயம் !!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.