(Reading time: 2 - 3 minutes)

போவோமா. . . கற்காலம்!!! - மது

இந்நூற்றாண்டு  மனிதன் - அறிவியல் வளர்ச்சியின் சுகவாசி

இக்கூற்றுக்கு  விதிவிலக்கு - பாரதத்தின் மிடில் கிளாஸ் ஜீவராசி

இவனை கால்பந்தாய் உருட்டி உதைக்கும் - எகிறும் விலைவாசி

 

எதையும் தாங்கும் இதயம் இருந்தும்

நினைத்தாலே கண்ணில் நீர் பெருகச் செய்யும்

ஜஸ்ட் ஒரே ஒரு கிலோ வெங்காயம் / தக்காளி  (அவ்வப்போது பெயர் மாற்றுவோம்   )

 

வறுக்கலாம் பொரிக்கலாம் அறுசுவை அரசி ஆகலாம்

போதும் கற்பனை - சீக்கிரம் சமைத்து முடிக்கலாம்

தீர்ந்(த்)து விடுவேன்  என மிரட்டும் காஸ் சிலிண்டர்..

 

கற்கை  நன்றே  கற்கை  நன்றே!

டொனேஷன் கொடுப்பின்

ப்ரீகேஜி  சேர்கை  இன்றே!

 

சொந்த வீடு வாங்க ரொம்ப நாளா ஆசை

வானம் கூட வசமாகும் - இந்த

வங்கி கடன் மட்டும் டாட்டா காட்டிப் போகும்

 

உயர்வு ஒன்றே எங்கள் லட்சியம்

பெட்ரோலும் டீசலும் பகிரங்க பிரகடனம்

நட- ராஜா  சர்வீஸ் தான் இனி தினம் தினம்

 

சிறு துளி பெரு வெள்ளம் - பழமொழி

கிரடிட் கார்டுடன் செலவை சமாளி - புதுமொழி

பில் வரும் நாள் மலைப்புடன் பிதுங்கும் இரு விழி

 

பட்ஜெட் என்றாலே அலர்ஜி சப்ஜெக்ட்

அலறி ஓடும் வேகத்தில் தோற்றது  ஏரோ ஜெட்

பரிணாம படிகளில் பின்னோக்கிப் பயணம்

கற்கால வாழ்க்கைக்குத்  திரும்பி விட விருப்பம்

 

{ இந்தக் கவிதை பல வருடங்களுக்கு முன்  பள்ளியில் ஒரு  debate காக    என் தங்கைக்கு அன்றைய hot topic அடிப்படையில் எழுதிக் கொடுத்தேன்...  இன்றும் அதே hot topic பதவியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது விலைவாசி.. கற்காலத்திற்குப் போகாமால் நான் இன்று சுகவாசியாக வாழக் காரணம்   என்  budget expert  அப்பா…. Thanks daddy}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.