பெண்மை - கவிதை போட்டி - 10 - ப்ரியா
எதிலடா குறைந்து போனோம்?
ஏறி மிதிக்க நினைக்கின்றீர்!!
சரிசமமாய் வந்திடுவளோ என சமையலறையில் சிறை வைத்தாய்
கருவறையில் உன் வாரிசு சுமந்து
குலம் காக்கும் குலமகள் ஆனோம்..
ஏரோட்டும் கணவனுக்கு கூழ் சுமந்த காலம் போய்
ஏவுகணை தனில் ஏறி விண்ணுலகம் பயணித்தோம்..
மனம் ஒடிந்து நீ வீழ்ந்தால்
அங்கு மடி கொடுத்து தாங்கினோம்..
உனக்கு ஒரு படி மேலாக
வீட்டுடன் நாட்டையும் காத்தோம்...
இவளை மிஞ்ச முடியாதென
இறுதியில் நீ எடுத்ததோர் ஆயுதம்!
வன்முறை என்னும் கொடூரம்!!
மானம் அழித்தேனும் வென்றிட நினைத்தாயோ
மீண்டு எழுந்து போரடிடுவோமடா!!