(Reading time: 2 - 4 minutes)

வாசுதேவ கிருஷ்ணன் - ப்ரியா

பிள்ளை நடையும்

கிள்ளை மொழியும்

பருவமதின் சரீரமும்

பயமறியா வேகமும்

ஒளி பொருந்திய வதனமும்

உன் குழலிநின்று எழும் உயிர் உருக்கும் கானமும்

கள்ளமற்ற புன்னகையின் வசீகரமும்

கபடமற்ற குறும்பு லீலைகளும்

எண்ணமற்ற நற்செயலும்

எல்லையில்லாமல் நீ அருளிய வரங்களும்

அகவை ம்மிஞ்சிய ஞானமும்

அகிலம் போற்றும் வீரமும்

தக்க சமயத்தில் நீ காத்த மானமும்

இப்படி எண்ணிலடங்கா நற்பண்புகளும்

காண்போரை மயக்கும் உன் வெள்ளை உள்ளமும்

 

எதுவுமே அந்த பேதை கண்ணில் படாமல் போனனவோ?

தன் துணைவனுக்காய் கண் கட்டி இருள் கண்ட

அவள் உள்ளமும் இருள் கண்டதோ..

உன் அன்பால் நனைந்து உருகி

உன் வழிப்பாதை நடந்தோறும்

ராஜா மரியாதை உனக்களித்து

மகுடம் சூட்ட அலைத்தோறும்

கூடியிருந்த அவை நாடி

உனை தூற்ற வந்தால் ஓடி..

நூறு பிள்ளை பெற்றவள் அங்கே  

தாய்மை மறந்து தவறு இளைத்தாள்

அனைவர் இதயம் அனலில் இருக்க

அனைத்தும் அறிந்த நீ மௌனம் காக்க

அந்தோ தந்தாள் கொடுஞ்சாபம் ஒன்று

வெந்திட்டர் பலரும் உயிரோடு அங்கு

அவரவர் அவளை தேற்ற முயன்று தோற்றனர்

வழி தெரியா நிலை எய்தி கை கட்டி பார்த்தனர்

 

பேரலையாய் எழுந்த சினம்

பெரிதும் வடிந்து போக

கால் நடுங்க தோய்ந்தாள்

மாதவன் நிழல் சாய்ந்தாள்

பெற்றெடுத்த நெஞ்சம் அது

கரைகடந்து கண்ணீர் பெருக்க

 தாயுள்ளம் கொண்டவனோ

தாவி சென்று தாங்கி பிடித்தான்

உம் நூறு மகனோடு தாமும் உன் மகன்

நீர் தந்த சாபம் அதை ஆணை என ஏற்கிறேன்

நடந்த அனைத்துமே இறைவன் சித்தம்

இதில் நான் செய்ய வழிகள் இல்லை நித்தம்

 

மானிடனாய் பிறந்ததினால் பலி ஏற்று நின்றாயோ

அருள் வழங்கி ஆசிர்வதிக்கும் நீ ஆணை எனவே ஏற்றாயோ

பாவி நானும் அங்கிருந்து அதை ஏற்க வழியில்லையே

துடித்து தவிக்கும் இதயத்தை அடக்கிடவும் தெரியலையே

பேதை எனை தவிக்க விடல்

உன் லீலையில் ஒன்றோ

வாசுதேவ கிருஷ்ணனே உனை

தவிர வேறுலகம் உண்டோ.......

 

தொலைக்கட்சியில் ஒளிபரப்பான மகாபாரதத்தின்  கடைசி நாள் அத்தியாயத்தில் காந்தாரி சாபம் தரும் நிகழ்வை கண்டு உள்ளம் வருந்தி எழுதிய கவிதை.. காதல், நட்பு அல்லாமல் நான் முதலில் செய்த முயற்சி பெண்ணியம்   பற்றிய கவிதை... அடுத்த முயற்சி தான் இங்கே உங்கள் முன்னால்.. பிழை இருந்தால் மன்னிக்கவும்... கிருஷ்ணனிடம் மனதை பறி கொடுத்த என்னை போன்ற பக்தரசிகைகளுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்... நன்றி :-) 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.