முட்டாள் சமூகம் - ப்ரியா
பத்துப் பக்கம் வசனம் எழுதி
பக்காவா பயிற்சி செய்து
பந்தாவா மேடையில் பேசும்..
பத்து வரி கவியில்
பக்குவமாய் வார்த்தை கோர்த்து
பகட்டுக்காக பிரசுரம் பண்ணும்..
பெண்ணியம் பேசி பேசி
மார் தட்டும் சமுதாயம்.....
கந்தல் ஆடை கிழிந்து போய்
தெருவில் கிடக்கும் இள மங்கைக்கு
மேலாடை கொடுக்க நேரமில்லா
இயந்திர 'முட்டாள் சமூகத்தில்'
கேவலம் நானும் ஒருத்தி...!!!!