ஏக்கம் - ப்ரியா
நாள்தோறும் துளிர் விடும்
நலிவில்லா பூ அது
நல்லதுக்கு வித்திடும்
நலம்கெட சீர்குலைக்கும்
அதில் வித்தை உண்டு..
ஈன்ற மடி தேடி ஒன்று
ஈனும் காலம் போற்றி ஒன்று
தாகம் தீர பருக ஒன்று
தன்மானம் காக்க பார்க்கும் ஒன்று..
அதன் வகைகள் தன்னை
எண்ணி பார்க்க
என்ணிக்கைகளும் கேட்கும் ஒன்று..
பட்டுத்தரை நனைக்க
வெள்ளை நரை ஆதரிக்க
நடுங்கும் விரல்கள் பற்றி கொள்ள
தனிமை கண்ணீர் துடைக்க
காதல் கரம் அணைக்க
கனியும் அன்பை சுரக்க
நளபாகம் சுவைக்க
நடப்பவை இனிக்க
நினைப்பவை நடக்க..
எங்கெங்கிலும் எவற்றிலும்
பரவி கிடக்கும் அது..
ஏக்கம்..!!
{kunena_discuss:779}