(Reading time: 1 - 2 minutes)

பிரிவு என்பது யாதெனில் - ப்ரியா

Separation

ஒவ்வொருவரின் புரிதலுக்கு ஏற்ப

தன்னை வகுத்து கொண்டு..

இயல்பு திரிந்து நின்று

கடைசியில் திருத்தம் கண்டு

சொல்லில் அடங்காமல் முடிவது..

 

உடைந்து போன பொம்மை

தொலைந்த பென்சில் டப்பா

அழுது சென்ற தோழி

முகம் கலைந்து போன தோழன்

மறந்து போன காதல்

மறுத்து போன உறவுகள்…

 

பிரிவுகளின் பட்டியல் இங்கே நிற்கவில்லை..!!

மரத்து போன உணர்வுகள்

மறைந்து போன உண்மைகள்

கசந்து போன காலங்கள்

உறைந்து போன புன்னகைகள்

உலர்ந்து போன உரிமைகள்

உதிர்ந்து போன உடமைகள்

 

இப்படி பிற 'போன'க்களில் தன்னை

இன்னும் வலுவேற்றி கொண்டிருக்கிறது...

உண்மையில்,

பிரிவு என்பது யாதெனில..

 

கற்பனை காலம்

பாலைவனத்து நிலத்தடிநீர்

கடலின் இனிப்பு சுவை

முட்களின் பட்டு ஸ்பரிசம்

அரக்கனின் கருணை குணம்

அன்னையின் குரோதம்

 

பிரிவு..

இல்லாத ஒன்று

இருப்பதாக கருதப்படும் ஒன்று

இருதயத்தின் அடியில் இடம் பிடித்ததாக

இறுமாப்பு கொள்ளும் ஒன்று

அடம் பிடித்தலின்

ஆரம்பமான ஒன்று...!!!

பிரிவு வலிக்கும் மனதின்

பொய்யான ஒரு உண்மை

உண்மை ஆக முடியாத

ஒரு பொய்..!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.