(Reading time: 1 - 2 minutes)

அவனும் நானும் - 05 - என் ரசனைகளின் ரசிகன் நீ..!! - ப்ரியா

Hands

தங்கு தடையற்ற

என் தமிழுக்கு முன்

தத்தி தவழ்ந்து வரும்

உன் தமிழ் ரசனை..!!

 

பற்றி படர்ந்து வரும்

என் கவிதைகளின் முன்

ஒட்டிக் கொள்ள இடம் தேடும்

உன் அழகிய கிறுக்கல்கள்..!!

 

பழக்கம் கை கொடுத்ததால்

என் இனிமை ராகத்திற்கு முன்

இசைக்கு புது வரவான

உன் ரசனையின் ரீங்காரம்..!!

 

பொத்தி வளர்க்கும்

என் ரோஜாக்கள் நடுவே

குட்டி குட்டியாய்

உன் கற்பனை பூக்கள்..!!

 

நீலக் கவிதையாய் ரசிக்கும்

என் வானத்திற்குள்

கொள்ளை இன்பமாய்

உன் ஆசை மேகங்கள்..!!

 

வண்ண வண்ணமாய்

என் கண்முன் விளக்குகள்

அதில் ஒளிர் விடும்

அழகாய் உன் கண்மணிகள்..!!

 

கொஞ்சம் மிச்சமில்லாமல்

என்னை நனைக்கும் மழையினுள்

தொட்டு தெறித்து சிலிர்க்கும்

உன் உயிர் துளிகள்..!!

 

கொள்ளை கொள்ளையாய்

நான் வைத்திருக்கும் ரசனைகள்

அதற்குள் கொட்டி கிடக்கும்

காதலின் ரசிகனடா  நீ..!!!

Avanum naanum - 04

Avanum naanum - 06

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.