(Reading time: 1 minute)

அவனும் நானும் - 06 - மழையின் மகிழ்ச்சி நீ..!! - ப்ரியா

Hands

பூமி அனுப்பி வைக்கும்

நீராவி அணுக்கள் தனை

மேகக் கருவறையில்

சிறிது சிறிதாய் சேமித்து..

மாதங்களோ நாட்களோ

பக்குவமாய் பல கடந்து

பிரசவிக்கும் வேளை கூட

இடி மின்னலுடன் ஆடி பாடி..

மீண்டும் கொடுத்தவனுக்கே

அனுப்பி வைக்கும் பெருமிதம்..

மண்ணில் எங்கெங்கும்

மகிழ்ச்சி பரப்பும்..

ஆகாயத் தாய் அவளுக்கு வலித்திட்டால்

சில சமயம் பெரிதாய் மாறி

அச்சமும் தரும்..

மழை மழலை போன்றதடா..

என்னை சாரலில் நனைக்கும்

சில சமயம் பெருமழையாய்

அடித்தும் செல்லும்

மகிழ்ச்சியான உன் காதல்..!!

 

Avanum naanum - 05

Avanum naanum - 07 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.