(Reading time: 1 - 2 minutes)

அவனும் நானும் - 08 - என் மௌனத்தின் மென்மை நீ..!! - ப்ரியா

Hands

காதலித்து நான் தினம் ரசிக்கும்

தமிழும் கூட தயங்கி நிற்கும்..

அலுவலுக்காய் நான் கற்ற

ஆங்கிலமோ ஒதுங்கி நிற்கும்..

அடி முதல் முடி வரையாய்

அதிர்வுகள் இன்றி அமைதி காக்கும்..

மனதறைகளில் நிறையும் மகிழ்வும்

மதி அடியினில் கொதிக்கும் துக்கமும்

மனமும் மதியும் மழுங்கடிக்கும் கோபமும்

மலை அளவில் இருந்தாலும்

ஒருநிலையில் வைத்திருக்கும் விந்தை..!!

மோதி பார்த்த தோற்ற வார்த்தைகள்

முற்றிலுமாய் மாறுபட்டு மரிக்கப்பட்டு

மனதேசம் கடத்தப்பட்ட பிறகு

மயக்கிடும் அமைதி அது

உண்மையில் மென்மை அது ..

சொல்லில்லாமல் மயக்கி

மென்மையாய் என்னை அணைத்து

கொள்ளும் மௌனம் போன்றதடா

வார்த்தைகளில் அடங்க உன் காதல்..!!!

 

Avanum naanum - 07

Avanum naanum - 09 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.