(Reading time: 2 - 3 minutes)

பூ அல்ல அவள் - பத்மாவதி

தெருநாய்கள் கூட ஆர்ப்பாட்டம் கொள்ளாது
ஏழறிவு கொண்ட மனிதன் செய்வதை காட்டிலும்...
பூ போலே பெண் என்றான்,ஏனோ
அவைகளை தன் போதைக்கு ஊருகாய் ஆக்கினான்...
அன்று மலர்ந்த பூ என்றும் பாராமல்
இன்று உதிரும் சருகு என்றும் நினையாமல்
அப்பூக்கலின் வாசத்திலே மயங்கி
அவைகளை துடி துடிக்க வைத்தான் பாவி அவன் -
பெண்ணை வெறும் தோலும் மாமிசமுமாய் பார்க்கும் வெறிநாய்கள் அவர்கள்..
 
குரல் எழுப்பினாள் அவள்!!!!!!!
அன்று நீதிக்கு மதுரையை எரித்தால் கன்னகி..
ஆனால் இன்றோ,
தன்னையே எரித்து கொள்கிறாள்...
 
நீதி தேவதையும் விலைமகளாகி போனாள் இவர்களிடம்...
சட்டம் இருட்டரை ஆனது...
 
துரத்தும் நாய்களும் நரிகளும் அவளின்,
மென்மையை வன்மை ஆக்கியது!!!!
எழுச்சி கொண்டு மலர்ந்தாள்..
பூ என்று தொடும் போது அறிகிறார்கள்
பூ அல்ல அவள்...
அவர்களை சுட்டெரிக்கும் அனல்- என்று!!!!!!!!
 
இது யாருடைய தவறு??
மென்மை கொண்டு பிறந்தது அவளின் தவறா?-இல்லை..
இல்லை ஆண்மை என்று ஒன்றை படைத்த கடவுளின் தவறா?-இல்லை..
ஆண்மையின் அர்த்தம் அறியாது ஆடிக்கொண்டிருக்கும் அவர்களின் தவறே!!!
 
எங்கே செல்வது நீதிக்கு??
என்று நிலமை மாறும் இயல்புக்கு??
எத்தனை வருடங்கள் தான் போராடுவது இதற்க்கு??
காலம் தான் பதில் சொல்லும் 
இவர்களுக்கு!!!!!!!!!!!!...........
 
அதுவரை போராடிக்கொண்டே இருப்பாள்!!
புயலில் அடித்து செல்லும் பூ அல்ல அவள்!!!
அப்புயலிலும் ஊன்றியிருக்கும் வேர்- அவள்!!!!!!!
 
I have written this after watching the movie 'Malini 22 palayamkottai'. For a decade we are fighting against child abusing,women harrasment,etc., but still its going on as never ending story.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.