(Reading time: 1 minute)

தாய்மை - அனு.ஆர்

கல்லூரி காலம்

காலையில்

மாலையில்

சாலையில்

வேகம்.

 

கண்ணிமைக்கும்

வேகத்தில்

கடுகிப் பயணம்.

 

இடித்தால் இடி

இழுத்துக் கொண்டு

கிடக்காமல்

இப்பொழுதே

மடியும் படி.

தம்பியிடம்

சொல்லியபடி

தடதடத்தன

இரட்டை சக்கர

வண்டி பயணங்கள்.

 

இப்பொழுதோ

இல்லற

துணையுடன்

இரட்டைசக்கர

இயந்திரத்தில்

ஏறுவதே

இல்லை.

 

நான்கு சக்கர

நல் வாகனத்திலும்

நீடுழி வாழ

நிறை ஜெபங்கள்.

 

படைத்தவனே

பார்த்திருப்பவனே

பாதகமின்றி

பாவை எனை

பத்திரமாய்

பாதுகாத்து

தீங்கின்றி

திருப்பி என்னை

அகம் வந்து

சேர்த்திடுவாய்!

 

அம்மாவாக

இருக்கிறேன்

நான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.