(Reading time: 1 - 2 minutes)

வார்த்தை எனும் விதை - அனு.ஆர்

அப்பா

இவர்தான்

அன்னை

சொல்ல

அன்றே

நம்பினோம்.

 

குரங்கிலிருந்து

வந்தான்

மனிதன்.

அடித்து சொன்னார்

டார்வின்.

அப்படியே

நம்பினோம்.

 

உலகம் தட்டை

என்றனர் முதலில்

நம்பினோம்.

 

இல்லை

உருண்டை

என்றனர் அதன்பின்

நம்பினோம்.

 

இதழ்களின்

மொழிகளை

நம்புவது

இதயத்தின்

இயல்பு.

 

அழகன்

நீ அறிஞன்.

 

அஹிம்சை அது

ஜெயிக்கும்

அன்பான நாவோ

எலும்புகளை முறிக்கும்.

 

சிறக்க பிறந்தவன்

சிறுவன் நீ

உழைப்பால் உயர்வாய்

நிச்சயம் நீ.

 

பால்ய காதல்

படு மோசம்

வேலை கிடைக்குமுன்

வந்த காதல்

நாசம்.

 

சீராளா!

நீ சிந்தனை சிற்பி

உனக்குள் உண்டு

ஆயிரம் வெற்றி.

 

கணவன் மனைவியாய்

கொள்ளும் காமம்

களிக்கும்.

மற்றவகை

கண்ட காமம்

உள்ளே

அருவருக்கும்.

 

வாசனை திரவியமே

நீ இறைவன்

எழுதிய

பெருங்காவியமே!

 

ஆணும்

பெண்ணும்

அனைத்திலும்

சமம்.

மாற்றிச் சொல்பவர்

உயிருள்ள

சவம்.

 

இப்படி

பாஷையால்

பாராட்டி

பாசம்காட்டி

பண்பு ஊட்டி

நன்மைகளை

நம்ப செய்வோம்

நம் மக்களை

அல்லது

தொலைகாட்சியும்

அலை பேசியும்

அமர்ந்து

கற்கும்

வகுப்பறையும்

அல்லவை

சொல்லி

அழித்துப்போடும்

பிள்ளைகளை.

 

வார்த்தை எனும்

விதை

விதைத்தால்

விளையாமல்

திரும்பாது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.