(Reading time: 1 - 2 minutes)

உண்மையான நகைச்சுவை  - ஜான்சி

அலுவலகம் தந்த மன அழுத்தம் போக்கிட
அமர்ந்தேன் தொலை காட்சியின் முன்

ஒன்றையொன்று விரட்டும் பூனை, எலி கார்ட்டூன் கருத்தை கவரவில்லை.
மாமியார், மருமகள் தொடர் காண எந்தன் மனமோ துணியவில்லை.

வனங்கள், மிருகங்களும் கூட என் சிந்தையை வெற்றிக் கொள்ளவில்லை.
திரைப்பட பாடல்கள், நகைச்சுவையும் ஏனோ உவகை தரவில்லை.

செய்திகள் பார்த்திட விசை அழுத்த அங்கே "அரசியல் வியாபாரிகளின்" விவாத மேடை.
அவர்கள் கலந்துரையாடியது தம் கனவிலும் சிந்தித்தறியா ஏழை மக்கள் படும் பாடை.

ஒருவரை ஒருவர் சாடியதும் பற்பல வார்த்தை பேசியதும் பார்த்திட்டேன் 
இதுவே உண்மை நகைச்சுவை என உணர்ந்ததனால்,கட கடவென்று சிரித்திட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.