(Reading time: 1 - 2 minutes)

07. காதல் என்பது - ஜான்சி

Love is

சிறு முள் தன் சருமம் தீண்டிடவும் துடித்திடுவாள் அவள்.

வெயிலின் உஷ்ணமதை பொறுத்திட இயலா தன்மையுளன் அவன்.

அந்தஸ்து பேதமெனும் ஒர் உருப்படா காரணி கொண்டு 
காதலதை குடும்பங்கள் பிரிக்கின்ற நிலை வரவும் ,

வலி உணர்வும் மறத்ததுவோ,
வாழ்வின் சுவையதுவும் சலித்ததுவோ!?!!!

மக்கள் கூட்டமதை சுமந்துச் செல்லும் பணியொன்றே நோக்கம் கொண்ட

அப்பாவி ரயிலதனை கொலைஞனாக்கும் முடிவோடு

தம் உடல் உறுப்பை துண்டாடி உயிரதனை மாய்த்துக் கொள்ள துணிகின்ற (?) கோழைத்தனமே..

உந்தன் பெயர் தான் காதலா!!!?

பி.கு:
என் மனதில் பதிந்து போன ஒரு சம்பவத்தின் வெளிப்பாடு தான் இக்கவிதை.பெற்றோர்களின் புரிந்துக் கொள்ளும் தன்மை மற்றும் பிள்ளைகளின் தன்னம்பிக்கை கூடியதன் காரணங்களால் தற்போது இப்படிப் பட்ட சம்பவங்கள் குறைந்து விட்டது மகிழ்ச்சிக்குரியது.

Poem 06

Poem 08

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.