(Reading time: 1 minute)

நண்பன்??? - ஜான்சி

சிரித்துப் பேசுவதால்,
இனிமைச் சொற்களினால் மட்டும்
நண்பர்கள் ஆவரோ?!

இன்ப துன்பம் பகிர்வதால்,
துன்ப நேரம் ஆறுதல் தருவதால் மட்டும்
நண்பர் ஆவரோ?!

தவறென்று தெரிந்ததை
தவறென்றேச் சுட்டுவதால் மட்டும்
நண்பர் ஆவரோ?!

இவை அனைத்தும் ஒருபுறத்தில்
நற்குணமாய் இருப்பினும்,

தன் நண்பன் சொன்ன ரகசிய செய்தியொன்றைக் காவாமல்

உலகெங்கும் பறையடிக்கும் பொழுதே,
நண்பர் என்னும் பந்தம் உடைதல் காணீரோ.

நண்பர்கள் எல்லோரும்
நண்பர்கள் அல்ல,
என்னும் உண்மை உணர்வீரோ?!!!

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.