24. காதல் என்பது - ஜான்சி
வழமையான வரவேற்பிற்கான
அணைப்பென்றாலும்
தனிமை தீர்க்க, துன்பம் போக்க -நான்
உன்னகம் புகும் சரணென்றாலும்
மகிழ்ச்சியை பகிர்ந்திட -பல நேரங்களில்
உன் தோள்தனில் சாய்ந்தே களி கொண்டாலும்
உன் கரங்களுள் சேர்ந்து -உந்தன்
மார்பினில் சாய்வது,
உந்தன் விரல்கள் - எந்தன்
தலை வருடியே அலைபாய்வது
தாயின் கருவறை
பாதுகாப்பு உணர்வை
எப்போதும் தருவது
எவ்வாறடா?
ஓ
இதுதான் காதலா?
{kunena_discuss:1090}