(Reading time: 2 - 3 minutes)

என் காதலா - விஷ்ணு பிரதீப்

(ஆ -ஆண்,பெ-பெண் ) 

பனி பொழியும் ஓர் அதிகாலை பொழுதில் 
முழு நிலவைப் பார்த்தேன்,கோலம் போடும் 
கோமகளாக!!!!!(ஆ ) 

வெட்கம் வெதும்பி நிற்கிறேன்..... நான் 
ஆதவனே உன்னை பார்த்தவுடன், ஒளியிழந்து 
போனதும் அறிவாயா???(பெ) 

மணிக்கு பல்லாயிரம் மைல் வேகத்தில் 
பறக்கும் என் மனதில் பொருத்தப்பட்ட வேகக் 
கட்டுப்பாடு கருவியும் நீ தானே !!!(ஆ ) 

காதலின் உலகத்தில் எல்லைகள் ஏதும் உண்டோ 
அதனை தொடத் துடிக்கிறாய்...உன் ஆரம்பமும் 
முடிவுமாக இருப்பவள் உன் மனதில் தானே!!!(பெ ) 

கேள்விகள் போதும் வேள்விகள் வேண்டாமா 
பெண்ணே ....வேதனை இன்னும் எத்தனை 
நாளுக்கு என் காதலியே ??(ஆ ) 

வேலி போடாமல் பயிர் செய்வது தான் 
தகுமா ....உழவனே உன் விளை 
நிலத்தை வீணாக்கலாமா!!(பெ) 

நிலமகளே ...உன் மீது பொழியும் பனித்துளி 
நான் ....பட்டென பற்றிக் கொள்கிறேன் 
உந்தன் தேகம் தொட்டவுடன் !!!(ஆ) 

என் மனதினை ஆளும் மன்னவனே 
இவள் எப்பொழுதோ உன் வசமாகி 
விட்டாள் இன்னும் ஏன் இந்த பாசாங்கு ??(பெ) 

என் பார்வையில் இருந்த காமங்கள் எல்லாம் 
அன்பே ..உன் கதிரியக்க கண்களில் 
காணமல் போனது !!! (ஆ) 

கள்வனே ...உன்னை காலமெல்லாம் 
எந்தன் மனக் கருவறையில் சுமப்பேன் 
என்றும் கன்னித் தாயாக !!!!(பெ) 

உனக்கு உவமைச் சொல்ல உலகம் 
போதாதடி .....என்னவளே என்னை 
வாடி வதைக்காதே!! (ஆ) 

ஆசைக் காதலா... என்றும் என் நினைவகளில் 
நிற்பதும் நீயே ..அதனை சுற்றி கவியும் 
கனவுகளில் வாழ்பவனும் நீயே.....(பெ) 

அழகே உன் கைகோர்த்து வாழ்க்கை நதியை 
நீந்த ஆசை ...... 

காதலா உன்னை காதலிக்கவே நான் 
பிறப்பெடுத்தேன் ..ஏற்றுக்கொள் இவளை !!!!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.