(Reading time: 3 - 5 minutes)

அவளின் டைரியில்… - மீரா ராம்

01. தீபாவளியில் நான் ….

 

தீப ஒளி திருநாள்…..

ஊரெங்கும் ஒளிர்கிறது வண்ணமயமான விளக்குகளால்,,, வானவேடிக்கைகளால்...

ஏனோ கரும் இருள் சூழ்ந்து பரவுகிறது,,,

என் விழிகளுக்குள் மட்டும்….

என் உள்ளமதில் மாபெரும் பிரளயம் நடந்து

கொண்டிருப்பதை அறிவாரும் உண்டோ ???

மூடிய  இமைகளுக்குள் கண்ணீருடன் சேர்ந்து

போராடி தவித்துப் போகின்றேன் ஒவ்வொரு நொடியும்…..

சென்ற வருட நினைவுகள் கடல் அலை போல,,,,

வந்து வந்து என் மனக்கரையைத் தொட்டுச் செல்லும்,,,

சுவடுகள் உணருகின்றேன் நான் இன்று….

புத்தாடை அணிவித்து உனக்காக காத்திருந்த நிமிடங்கள்….

பார்த்து பார்த்து உனக்காக சமைத்த உணவுகள்……

கைபேசியுடன் உனக்காக தனித்திருந்த தருணங்கள்….

வாசல் பார்த்து உனக்காக எதிர்பார்த்த விழிகள்….

இலை போட்டு உனக்காக பரிமாறிய நேரங்கள்…

யாரும் அறியாமல் உனக்காக அள்ளித்தந்த ஒரு பிடி சோறு….

உன் மலரிதழ் பட்டு நடுங்கிப் போன என் விரல்கள்….

சிலிர்த்த என் உடல்………..

அழியா உலகத்தில் நீயும் நானும் வாழ்ந்து கொண்டிருந்த அழகிய சூழல்…..

இந்த நிமிடம் இப்படியே உறைந்து விடாதோ ????..

எண்ணி எண்ணி வியந்து போன கணங்கள்…..

நேரம் போவதே தெரியாமல் உன்னுடன் பேசிக்கொண்டிருந்த மணித்துளிகள்…..

கை ஆட்டி தலை அசைத்து என்னிடம்

விடைபெற்று நீ சென்ற நாழிகைகள்….

உன்னுடன் கழித்த இனிமையான இன்ப அலைகளை,,,

அசைபோட்டு எனக்குள் சிரித்துக் கொண்ட உண்மைகள்….

கண்களில் நீர் வழிய,,, சிறு விசும்பல் எட்டிப்பார்க்க,,,,

சுயநிலைக்கு வந்தேன் இன்றைய நாளில்….

புது ஆடை உடுத்தினேன் விருப்பமில்லாது….

பதார்த்தம் உண்டேன் மனமில்லாது….

கைபேசியுடன் காத்திருந்தேன் சலனமில்லாது…

வாசல் பார்த்து பூத்துப்போனேன் வெறுமையில்லாது…

இலை போட்டு பரிமாறினேன் உணர்ச்சியில்லாது…

பிடி சோறு அள்ளித்தர முனைந்தேன் எதிரே நீயில்லாது….

கனத்த இதயம்,,, நிலைகுத்திப் போன பார்வை,,,

சுலித்த உதடுகள்,,, நலிந்த மேனி,,,

என் இன்றைய தோற்றம் இது…..

உன்னைப் பிரிந்த நாளிலிருந்து,,,,,

உயிரற்ற உடல் கூடாய் நடமாடுகின்றேன்,,,, 

நெஞ்சுக்கூட்டில் உன்னை சுமந்து கொண்டு….

 

நாகரீகம் பார்ப்பவன் நீ எச்செயலிலும்….

ஏன் நீ இன்று ஒருமுறை கூட பேசவில்லை…????.

ஒரு வாழ்த்து கூட தெரிவிக்க ஏன் முயற்சி செய்யவில்லை ????

இதுதான் உன் நாகரீகமா ?????

கடந்த வருட ஞாபகங்களில் ஒன்றேனும் உனக்கு நினைவு இருக்கிறதா ???

நானோ அதில் மட்டுமே சிக்கி சுழலுகின்றேனே….

அந்த நாளில் கருப்பு உடை அணிந்தவன் தானே நீ.....

அதன் அர்த்தம் அன்று புரியவில்லை….

இன்று புரிகிறது அது உனது வெறுப்பின் அடையாளம்….

உன் புறக்கணிப்பின் மறு அவதாரம் தானோ அது.....

ஏதேதோ எண்ணங்களில் மூழ்கிப்போகின்றேன் உன்னை நினைத்து….

எனக்கு ஏனிந்த அவலம் வந்தது ???

யார் உனக்கு அனுமதி அளித்தது?

எனை பேதலிக்க செய்ய….

எனை நோக செய்ய…….

எனை உயிருடன் நெருப்பிலிட….

எனை முள் வேலிக்குள் தள்ளிட….

வலிக்கிறதடா என்னவனே….

இதயத்திலிருந்து இரத்தம் வழிகிறதடா

காதலனே……..

இச்சித்ரவதையிலிருந்து எனை விடுவி…..

Avalin diary'l - 02

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.