(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில்… - மீரா ராம்

09. தூங்க விடுவாயா என் தாலாட்டே... 

இந்த தேதி, மறக்க முடியாத நாள் ஒவ்வொரு மாதமும்…

உன்னை மறந்தால் அல்லவோ இந்த தேதியை மறப்பதற்கு….

இன்று நிறைய சிரித்தேன்… நிறைய வாய் பேசினேன்…

ஆனால் அனைத்தும் உதட்டிலிருந்து செய்தவை தான்…

என் மனதிலிருந்து வெளிவந்தவை அல்ல…

செயற்கையாய் பலரின் முன் நடிக்க தெரிந்த எனக்கு

இயற்கையாய் என் மனதின் முன் நடிக்க இயலவில்லை…

என் சந்தோஷம் உன்னோடு தான் இருக்கிறது…

நீ தான் என் சந்தோஷம்….

நீயில்லாத இடத்தில் சந்தோஷம் மட்டும் எப்படியிருக்குமடா கண்ணா???

வெட்கம் இல்லாது உன்னிடம் பேச விழைகிறேன்…

ஆனால் எதுவோ ஒன்று என்னை தடுக்கிறது…

அன்பை யாசகமாக வாங்க விரும்பவில்லை நான்…

ஓர் நிமிடம் ஒரே ஒரு நிமிடம் உன் மனதில் நீ

என்னை நினைத்தால் இங்கு என்னுயிர் பூப்பூக்குமே…

நினைக்கத்தான் உனக்கு மனம் வரமாட்டேன் என்கிறதே…

துர்பாக்கியசாலி தான் நான் மிகவும்…

உன் வாழ்க்கையில் தான் நான் இருக்கும் பாக்கியம் இல்லை…

இன்று உன் நினைவிலும் இல்லாமல் போனது

என் விதியன்றி வேறென்ன என் ஒளியே…

உன் கண்ணின் மணியை எண்ணிக்கொண்டு

தூங்க செல்கிறேன்…

என்னை… தூங்க விடுவாயா… என் தாலாட்டே…

Avalin diary'l - 08

Avalin diary'l - 10

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.