அவளின் டைரியில்….. மீரா ராம்
11 நிறைவேறுமா என் அடி மனதின் ஆசை???
உள்ளமெங்கும் உன் நினைவுப் பந்துகளின் ஓட்டம்...
தூங்குமுன்பு உன்னுடன் அனைத்தையும் பகிர்கிறேன்...
அன்று முழுவதும் என்ன நடந்தது, சிரித்தேனா?
அழுதேனா? வருத்தப்பட்டேனா??... அனைத்தையும்
முழுவதுமாய் உன்னிடம் ஒப்பிக்கிறேன்...
நீ என்னருகில் இருப்பதாய் கற்பனை செய்து...
பரதநாட்டியம் பயில முயன்றேன் இன்று...
என்ன ஒரு கற்பனை எனக்கு... ஒருநாள் உனக்கு
நடனம் ஆடி காட்ட வேண்டும், எனவே நன்றாக ஆடு என
மனம் கட்டளையிட, என் உற்சாகமும் வடிந்தது...
ஒருநாள் அப்படி ஓர் நாள் வருமா என் வாழ்வில்???
உன்னை சில நொடிகளாவது மறக்க எதில் நான்
ஈடுபட்டாலும் மனம் உன்னையே தஞ்சமடைகிறதே...
இது தான் காதலா?... காதலுக்கு சிறப்பைத் தரும்
மாதத்தின் முதல் நாள் இன்று...
யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம்... அது எளிது...
ஒருவரால் காதலிக்கப்படுவதே சிறப்பு... அது அரிது...
நான் உன்னை காதலிக்கிறேன் அன்றும் இன்றும்...
உன்னால் நான் காதலிக்கப்படுவது எப்போதடா?...
ஆசைப்படுகிறேன் மிகவும்... காதலிக்கப்படும்
சுகத்தை உணர, நுகர, ரசிக்க.... நடக்குமா?...
நிறைவேறுமா என் அடி மனதின் ஆசை?....
{kunena_discuss:784}