(Reading time: 1 - 2 minutes)

அவளின் டைரியில் - மீரா ராம்

22.காதலிக்கத் தான் தோன்றுகிறது அதிகமாக இன்னும்…

உன் முகம் பார்க்க ஆவல் எட்டிப் பார்க்குது…

உன் குரல் கேட்க ஆசை முட்டி மோதுது…

ஆனால் பேசத்தான் தயக்கம் கொள்கிறேன்…

உன்னை ஏனடா இப்படி காதலிக்கிறேன்???...

பைத்தியமாய் உன்னிடத்தில் ஏன் இப்படி தொலைகிறேன்???...

உன்னைப் பற்றி நினைக்கவோ, பேசவோ கசக்கமாட்டேன் என்கிறதே…

மறதிக்கும் கூட மறதி வந்து போகலாம்…

ஆனால் எனக்கு உன்னிடத்தில் மறதி வந்தால்

அதுவே என் உயிர் பிரியும் இறுதி வினாடியாகும்…

இறக்கும் தருவாயிலும் உன்னை நினைக்கவே விரும்புகிறேன்…

மறக்கும் தருணங்கள் என்னிடத்தில் இல்லவே இல்லை…

படிக்கும் கதைகளிலும் நாவல்களிலும்

கேட்கும் இசையிலும் வார்த்தையிலும்

ஏன் நீ மட்டுமே புலப்படுகின்றாய் எனக்கு???

உண்மையில் நீ என்னை விட்டு வெகு தூரமாய்…

இருந்தும் என் அருகில் இருப்பது போல் நீ…

ஏன் நான் அவ்வாறு உணர்கிறேன்???.. எதற்காக???...

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு தான் என சொல்வார்களே…

எனில் உன் நினைவு விருந்திற்கும், விலகல் மருந்திற்கும்

ஏன் நாட்களின் எண்ணிக்கை இல்லை!!!!!

வருடக்கணக்கில் என்னைப் புரட்டி எடுத்துப் படுத்திப் பார்க்கும் உன்னை

காதலிக்கத்தான் தோன்றுகிறது அதிகமாக இன்னும்…

Avalin diary'l 21

{kunena_discuss:784}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.