(Reading time: 4 - 7 minutes)

அன்புள்ள அக்காவுக்கு…. – மீரா ராம்

அழகான மனைவி…

அன்பான அன்னை…

பாசமான அக்கா…

Happy Birthdayநல்ல மகள்…

கோபம் கொண்ட பெண்…

இதற்கெல்லாம் உன்னை கைகாட்டலாம் எளிதாக…

எனினும் உன் குணங்கள் எதிலும் சேராமல் தனியாக பிரகாசிப்பவை தானோ???

பாசத்திலும் உன்னை மிஞ்ச ஆள் இல்லை…

செய்த செயல் சரி தானென்று பிடிவாதம்

பிடிப்பதிலும் உன்னை மிஞ்ச ஆள் இல்லை…

எனக்கு பிடித்ததை தான் செய்வேன்…

பேச்சுக்கு கூட போலியாக பிடித்திருக்கிறதென்று நடிக்கமாட்டேன்

என்று நீ சொல்லும் வேளையில்

உனக்கொரு லைக்-ஏ போடலாம் தாராளமாக…

அதே நேரம் சிறு குழந்தையாய் வருந்துவதும்,

இதை செய்துவிட்டோமே இனி என்னாகுமோ என்று கவலை கொள்வதிலும்

நீ தனி அழகுதான் பெண்ணே…

இதைவிட பாசமான உறவின் திட்டும் வார்த்தையை கூட

சர்வசாதாரணமாக எடுத்து கொள்ளும் கலை உனக்கு மட்டுமே வரும்…

அப்பொழுது சிரிப்பாயே நீ…. அய்யோ… கொள்ளை அழகு…

எதார்த்தத்தின் அகராதியை புரட்டினால் அதில்

உன் பெயரும் நிச்சயமாய் இருக்கும்…

இது தான் வாழ்க்கை… இப்படித்தான் மனிதர்கள் இருப்பார்கள்

என்ற உன் வார்த்தையில் தான் எத்தனை நிதர்சனம்???

உன் குட்டி குட்டி கவிதையும்,

அதில் திருத்தங்கள் கூட, என்னுடையதாய் இருக்கணும்

இல்லையெனில் அது எனதாகாது என

சொல்லும் இடத்தில் உனக்கு ஒரு சபாஷ் போடலாம் பெண்ணே…

கவிதையை சொன்னால் நிச்சயம் அடுத்ததையும் சொல்லணும் அல்லவா??

ஹ்ம்ம்… உன் இனிய கானம் தான் அது…

புல்லாங்குழலால் மயங்கியவர் கதை பல கேட்டிருக்கலாம்…

ஆனால், உன் இனிய கானத்தால், மயங்கியவர் கதையில்

கண்டிப்பாக எங்களுக்கும் இடம் உண்டு…

பின்னே, உன் பாடலுக்கு விசிறியாய்

உன் உள்ளத்தில் இடம் பிடித்து விட்டோம் அல்லவா???

வசியம் கூட நிலை தடுமாறி உன் குரலில்

நீ பாடும் விதத்தில் உருகி காணாமல் போய்விடுமடி பெண்ணே…

நான் இதை சொல்லியே ஆகணும்…

யெஸ்… நீ பாடும்போது அவ்வளோ அழகு…

நீ எங்கிட்ட பேசலை… எங்கூட நேரம் ஒதுக்கலை என

தோழிகள் சண்டை போட்டு கொள்ளும் காலத்திலும்,

நட்பை புரிந்து கொண்டு எதார்த்தத்தோடு பயணிக்கும்

புதுமை தான் உன் நட்பும்… நீயும்…

தோல்வி கண்டேன்… அதிலிருந்து வெளிவர நாட்கள் குடு

என கேட்டால் கூட குடுத்திருப்பேன்… அதை விட்டுவிட்டு

நான் தோல்வியே காணவில்லை, நலமோடு இருக்கிறேன் என

பொய்யாக நடிப்பவர்களோடு பேச விருப்பமில்லை என

சொல்லும் இடத்தில் உனக்கு நிகர் நீயே தான்…

திறமையை ரசிப்பதோடு நிறுத்தாமல்

முதல் ஆளாக காத்திருந்து படித்துவிட்டு

ரசித்து பாராட்ட எண்ணுகிறாயே இன்றளவும் பிரிந்தும் கூட…

ஹ்ம்ம்… சத்தியமா உனக்கு Substitute- ae இல்ல…

பிடித்தவர்கள், சண்டை போட்டாலும், கோபம் கொண்டாலும்

உடனே சென்று பேசிவிடும் ஈகோ இல்லாத புன்னகை மழலை நீ…

ஒரு பூ மலர்ந்தால் ரசிக்காதவர் எவரும் இல்லை…

ஆனால் அது மலர்வதற்கு பட்ட வலிகள்

அந்த மலர் மட்டுமே அறியும்…

நீயும் மொட்டுவிட்டு இன்று மலராகி இருக்கும் நங்கை…

உன் அன்பெனும் வாசம் என்றும் உன்னுடனே நிலைத்திருக்கட்டும்…

இன்று வளர்ந்த தளிராய் என்றும் பசுமை உன்னுடன் இருக்கட்டும்…

எப்போதும் சந்தோஷமாக இருக்கவேண்டுமென்று விரும்புபவளே…

நீ அவ்வாறே இருக்க இறைவனை வேண்டுகிறோம் நாங்கள் என்றும்…

 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் Sis... Akkama…”

 

Note:

ஹாய் பிரெண்ட்ஸ்… இந்த கவிதை சாரி சாரி இது கவிதையா இல்லையான்னு நீங்க தான் படிச்சிட்டு சொல்லணும்… இந்த எழுத்துக்கள் என் அக்காவிற்கு நான் கொடுக்கும் கிஃப்ட்… (என்னை நீங்க திட்டுறது எனக்கு கேட்குதுக்கா… இது தான் கிஃப்ட்-ஆ ன்னு…)

To My Dear Akkama…

மெனி மோர் ஹேப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் த டே… எப்பவும் ஹேப்பியா இருக்கணும் சரியா…

எனக்குன்னா மட்டும் கவிதை உனக்கு தோணாதேன்னு பல தடவை கிண்டல் பண்ணி சிரிச்ச முகம், இன்னைக்கு எப்படி இருக்கும்னு பார்க்க ரொம்ப ஆசையாதான் இருக்கு… பட் என்ன பண்ண?... பார்க்க முடியாதே… சரி நோ ப்ராப்ளம்… ஃபோனில் சொல்லுங்க… ஒகேயா?...

இயல்பான நடையில எழுது எழுதுன்னு அடிக்கடி சொல்லுவீங்க… அது என்ன மாயமோ தெரியலை… மந்திரமோ புரியலை… எனக்கு இப்படித்தான் எழுத வருது… இன்னைக்கு உங்களுக்காக எழுதும்போது ஏதோ ரொம்ப கொஞ்சம் இயல்பா எழுத முயற்சி பண்ணிருக்கேன்னு நினைக்கிறேன்… (திட்டாதீங்க… இதுதான் இயல்பான நடையான்னு)… பசிச்சிட்டு சொல்லுங்க… ஒகேயா?...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.