(Reading time: 2 - 4 minutes)

11. இளம்பூவை நெஞ்சில்...  - மீரா ராம்

உன்னில் நான் என்னை கண்டபின்...!!!…

Ilam poovai nenjil

மனம் உற்சாகத்தில் ஆனந்த கூத்தாடுகிறதா?

இல்லை சோகத்தில் விம்மி அரற்றுகிறதா?.

யாதும் அறியா சூழலில் சிக்கித்திணறுகிறேன்…

அடுத்து என்ன செய்ய என புரியாமல் தவிக்கிறேன்…

அஞ்ச அஞ்ச என் கைக்கு எஞ்சுவதும் ஏதும் இல்லை

என்றான பிறகு, அடுத்த நிலைக்கு போவது தானே உத்தமம்…

வார்த்தைகள் அனைத்தையும் கோர்த்து

செல்லப்பெயர் வைத்து அழைத்தும் பார்க்கிறேன்…

ஹ்ம்ம்..ஹூம்…

கெஞ்ச கெஞ்ச மிஞ்சுகிறாய்…

கொஞ்ச கொஞ்ச பறந்து பஞ்சாகிறாய்…

எதற்கடா இப்படி கஞ்சனாகிறாய்?...

மஞ்சத்தில் துஞ்ச நினைத்தவளை

சஞ்சலத்தில் தஞ்சமடைய வைக்கிறாயே….

மௌன நஞ்சை நெஞ்சில் விதைக்க போகிறாயே…

வேண்டாமடா கண்ணா…. இந்த விஷப்பரீட்சை…

செய்தது தவறென்று ஒப்புக்கொள்கிறேன்…

யாசகமாய் மன்னிப்பையும் வேண்டி நிற்கிறேனே…

புரியவில்லையா என் உள்ளம்?...

ஆத்திரத்தோடு இயலாமையும் சேர்ந்து கொள்ள

உனக்கு இது தேவைதான் என இருதயமும் வசைபாட

சிறுபிள்ளையாய் சிணுங்கி தான் போகிறேன்…

இரண்டு நாள் நான் பேசாமல் போனதன் பலன்

இன்று எனக்கே திரும்புகையில் தான் உணர்கிறேன்

நீ என்னை எவ்வளவு தேடியிருப்பாய் என்று….

தேடும் தேடல் யாவும் நானாய் இருந்ததில்

மகிழ்ச்சி பொங்க தான் செய்கிறது… ஆம்…

உன் தேடலில் நான் மட்டுமே இருந்திருக்கிறேன்

என உன் மௌனத்தில் எனக்கு புரிகிறது…

போதுமடா இந்த வேதனை விளையாட்டு…

ஒருவார்த்தை பேசி தொலைத்தால் தான் என்ன?...

வாய்விட்டு கேட்டு பார்த்தும் கல்லாகி இருந்தவன்

ஒரு சொட்டு நீர் என் கண்ணிலிருந்து விழுந்து

கன்னம் தொட்டு வழிய, என் குரலும் தேய

கூம்பியிருந்த உன் மௌனமொட்டும் சட்டென விரிய

உன் காதல் கொண்ட உள்ளமும் வெளிவந்தது அழகாய்….

“என் சகில்ல… அழாதடி….” என இதழ் திறந்து நீ பேச

அப்படியே மொத்தமாய் உன் வசமானேன் நான்

சிறிதும் என்னிடம் மிச்சமில்லாமல்…

எங்கு தானடா கற்று தொலைத்தாய் இந்த காதல் வசியத்தை…

சொற்கள் இல்லாத கேவல் என்னை மீறி வெளிப்பட,

ஒற்றை தலைஅசைப்பில் வேண்டாமடி சகியே

என உணர்த்துவதும் உன் காதலின் மறுஅம்சமோ?...

விவரம் அறிந்து கொள்ள மனதும் மறுத்திடுதோ???... என் ராஜா!!!...

உன்னில் நான் என்னை கண்டபின்!!!!!…

 

பூ மலரும்……….

Ilam poovai nenjil 10

Ilam poovai nenjil 12

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.