என் தேடல் - ஷக்தி
திசைகள் தெரிந்தும்
வழிமாறி தடம் பெயர
தொடரும் என் வலிப்பயணம்...
கனவுகள் தாண்டி
கரைந்தோடும் கனமான
எண்ணங்களின் தவிப்பில்
கல் நெஞ்சும் கலங்கி
காணாமல் போன தருணம்...
என் தூரம் அறிந்து
தொலைவில் தொலைந்து
போன என் தேடலில் நான்...
{kunena_discuss:779}