(Reading time: 2 - 3 minutes)

 04. ராதா கிருஷ்ணன் காதல் - ராதை சந்தித்த கண்ணன் - புவனேஸ்வரி

Rtahai santhitha kannan

பாசமாம் பாசம்!

சொல்வதெல்லாம் வேஷம் !

கண்ணனின் வார்த்தைக்கு மயங்கிட நான் கோபியரோ ?

மதிமயக்கும் மன்னவனின் மடிவிழ நான் மதுவுண்ட வண்டோ ?

 

காற்றே விடுகிறேன் தூது

சொல்லடி அவனிடம் சென்று !

நானில்லை பத்தோடு பதினொன்று

பேசச்சொல் என் மனதை வென்று !

 

பெற்றான் அவளது வார்த்தைகளை

சிதறினான் சிரிப்பினால் முத்துக்களை !

காத்தான் அமைதியை

இரவுமதி வரும்வரை !

 

காரிருள் இரவில் பட்சிகள் பதுங்கிட

தாவரங்கள் குளிரில் தலைகுனிந்து தவம் செய்திட!

வந்தான் கண்ணன் கானகத்தில்

அவன் மனம் கவர்ந்தவளோ ஆழ்ந்த உறக்கத்தில் !

 

எங்கோ கேட்டது மாதவனின் வேணுகானம்

காற்றை கிழித்து வந்தது கண்ணனின் காதல் அம்பு !

கண்விழித்தாள்  ராதை, முகத்தில் சிறு வியப்பு

புதிதாய் பிறந்ததுப்போல் ஜீவனுக்குள் ஒரு சிலிர்ப்பு !

 

தன்னை தொலைத்து சுவாசிக்க மறந்தாள்

வெண்மதி கேலிசெய்ய ராதையவள் வீட்டைத துறந்தாள் !

வேணுகானம் வந்த திசையைத் தேடி ராதை ஓடினாள்

கண்ணனுக்காக மங்கை அவள் வாசல் தாண்டினாள் !

 

கேட்டாள்  வழியெல்லாம் பூக்களிடம் முகவரி

புன்னகை மட்டுமே எங்களது பதிலடி !

சிரித்தன பூக்கள் எள்ளி நகையாடி

வேண்டாம் உன்உதவி, செல்கிறேன் நான் தேடி !

 

பதில் உரைத்து சென்றவள் மூச்சிறைக்க நின்றாள்

உலகத்தை விழிக்க வைத்து, இசைத்தவன் விழிமூடி குழலூதினான் !

அடங்காத காதலுடன் அவனைத் தழுவி தீர்த்தது தென்றல்

அதை கண்ட ராதைக்கோ மனதினுள் சிறு இன்னல்!

 

யாரவன் என்று கேட்காமல் நெருங்கி வந்தாள் 

உருவமில்லா தென்றலைக்  கண்டு முறைத்தாள் !

கண்ணனின் அன்புமுகம் கண்டாள்

கோபம் மறைந்தவளாய்  மண்டியிட்டாள் !

 

மஞ்சத்தில் தூக்கம் தொலைத்தவள்

அவன் மடியில் தஞ்சம் அடைந்துவிட்டாள்  !

தென்றல் வருடிய கண்ணனோ

அவள் உள்ளம் வருட விழித் திறந்தான் !

 

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்

Ratha Krishnan kathal - 03

Ratha Krishnan kathal - 05

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.