(Reading time: 2 - 3 minutes)

 05. ராதா கிருஷ்ணன் காதல் - கண்ணன் ராதை அடைக்கலம் - புவனேஸ்வரி

Rtahai santhitha kannan

அடைந்தாள்  ராதை மாதவனின் மடியில் தஞ்சம்

பொங்கிப் பெருகிய காதலை தாங்கியது இருவரின் நெஞ்சம் !

 

கண்ணீர் பொங்கிட கண்டாள்  கண்ணனின் வதனம்

மாயவனின் கன்னங்களிலோ  தீப்பட்டதுபோல் காயம் !

 

அதிர்ந்து எழுந்தாள்  கண்ணனின் சரிபாதி

விழி திறந்த கண்ணனிடமோ  பதில் இல்லா அமைதி !

 

விரல் நடுங்க தொட்டாள்  யதுனந்தனின் கன்னம்

சட்டென மாறியது காயத்தின் வண்ணம் !

 

கள்ளம் புரிந்தவன்  காதலோடு சிரித்தான்

மனதில் சிலிர்த்தவளோ  பொய்யாய் முறைத்தாள் !

 

பற்றினான் ஓட முயன்றவளின் கரம்

வேண்டாம் உன் லீலை இன்னொரு தரம் !

 

லீலை யான் புரியவில்லையே என்றான் மன்னவன்

எனில் காணும் காட்சி பொய்யோ என்றாள்  அவனவள் !

 

விளக்கம் சொல்கிறேன் அருகில் வா ராதை

வேண்டாம் நான் அறிவேன் கண்ணன் அருகாமை தரும் போதை !

 

புன்னகை புரிந்தவன் விளக்கமும் தந்தான்

விளக்கம் உணர்ந்தவள் அவனை தழுவிடவே வந்தாள்  !

 

கண்ணனின் இன்னுயிர்  ராதை

அவள் கண்ணீரோ அவனுக்கு சித்ரவதை !

 

காதலில் பூத்த  அவள் ஒரு புஸ்பம்

அவள் சிந்திய கண்ணீரில் ஆனது அவன் உள்ளம் பஸ்பம் !

 

அகத்தின் அழகை காட்டும் முகம்

காட்டியதே கண்ணனின் தீப்பட்ட நெஞ்சம் !

 

அவள் கண்ணீராலே அவன் கொண்டான் காயம்

இதை மாயம் என்பதில் உண்டோ நியாயம் ?

 

கேட்டான் கண்ணன் கேள்வியுடன் அவள் நெஞ்சத்தை

தந்தாள்  ராதை தழுவலுடன் தன் உள்ளத்தை !

 

செந்நிற பூக்களும் முகம் சிவக்கும் இரவு

தொடங்கியதே கண்ணன் ராதையின் காதல் நல்லுறவு! 

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்

Ratha Krishnan kathal - 04

Ratha Krishnan kathal - 06

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.