(Reading time: 4 - 7 minutes)

ஆண்களுக்கு நன்றி - புவனேஸ்வரி

பெண்ணென பூமிதனில்  பிறந்துவிட்டால்,

பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் !

 

என்றானே முண்டாசு கவிஞன்,

ஆண் என்ற திமிரில் துகிலுரியும்

 

அந்த கயவர்களை பற்றி அன்றே

கண்டுகொண்டுவிட்டானே என் பாரதி !

 

இன்பமும் அமைதியும் சூழ்ந்திருக்க வேண்டிய

அழகிய புவியில் யார் தந்த சாபம் இது ?

 

பூக்களால் எங்கெங்கும் அலங்கரிக்க வேண்டிய பூமியில்

பெண்ணின் மேலாடை குருதிக் கரையில் அலங்கரிக்க படுகிறதே !

 

கவிர்ச்சியூட்டும் ஒப்பனைதான் காரணம் என்றீர்

மூன்று வயது சிறுமிக்கு என்ன தெரியும் ஒப்பனையை பற்றி ?

 

உணர்ச்சிகள் தூண்டும் உடைகள் என்றீர்

எழுபது வயது மூதாட்டியிடம் அப்படி என்ன உணர்ச்சிகள் கிளர்ந்துவிட்டது ?

 

கத்தியால் பதம் பார்த்த காயத்தில்

தீ வாரி இறைத்தது போல ஊடங்களும் பத்திரிக்கைகளும் !

 

தினசரி பெண்ணின் பரிசுத்தம் கலைக்கபட்ட செய்தியை

ரசிப்பதற்காகவே உரைப்பது போன்ற பாணியில் நாளிதழ்கள் !

 

ஊடகங்கள் உயர்ந்தன அதைவிட ஒருபடி

மாதம் ஒரு முறை கணக்கெடுப்பு !

 

" குற்றம் புரிந்தவனுக்கு என்ன தண்டனை அளிக்கலாம் " ?

கறக்கின்றனர் மக்களிடம் சுடச்சுட பதில்கள் !

 

ஆனால்  இதுவரை காணவில்லை ஓர் மாற்றம்

கணினியில் கோபமாய் பதில்கள் கொடுத்தும் !

 

வானொலியில் உணர்ச்சிபொங்க பதிலளித்தும்

கிடைத்தது என்னவோ தொகுப்பாளரின் "கருத்துக்கு நன்றி "

என்ற பதிவு மட்டும்தான்!

 

நீதியில் ஏதும் பெரிய மாற்றமில்லை

என் வீதியிலும் தர்ம தேவதை வளம் வரவில்லை !

 

சொன்னான் எங்கிருந்தோ ஒரு பெரியவன்

ஏழு மணிக்கு மேல் வெளிவராதே என்று !

 

அய்யா பெரியவரே,

பெரிதொரு கூண்டு கட்டி எங்களை அடைத்து விடுங்களேன் !

 

அல்லது சிறைச்சாலையில் குற்றவாளிகளை வெளியேற்றிவிட்டு

எங்களை அங்கு பூட்டி வையுங்கள் !

 

சூரியன் உதிப்பது தப்பல்ல

அதன் கதிர் உன் மேனியில் படுவதுதான் தப்பு!

 

என்று வாதிடும் வஞ்சக நெஞ்சங்களை  கூருபோடவே

ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் காளி  அவதரிக்கிறாள் !

 

ஆண்  என்பவன்

உறவுகளை உண்டாக்குவதில் பிரம்மனாகிறான் !

உறவுகளை காப்பத்தில் விஷ்ணுவாகிறான் !

துன்பங்கள் எரிப்பதில் சிவனாகிறான் !

 

ஆனால் இங்கு மட்டும்

துச்சாதணன்களின் நடுவில் ஒருசில தேவர்கள் !

 

வேலியே  பயிரை மேய்கிறது என்பதா ?

கடலே கடல்ஜீவன்களை  விழுகியது என்பதா ?

 

வேரே  மரத்தை சாய்க்கிறது என்பதா

தாயே சேய்களை  கொள்கிறாள் என்பதா ?

 

தூணிலும் துரும்பிலும் இருப்பேன் என்றானே

அவள் தாவணி பரிக்கபட்டபோது அவன் எங்கு சென்றுவிட்டான் ?

 

அழைத்தால் வருவேன் என்றானே

அவள்  பெண்மை அழியும் கூக்குரல் அவனை எட்டவில்லையா ?

 

ஒளவையின்  இளமையை முதுமையாய்  மாற்றிய

ஆணை முகத்தான் கணேஷன் எங்கே ?

 

எங்களையும் உருமாற வைத்துவிடு இறைவா

தினம் தினம் கயர்வர்களின் பார்வையினாலே 

 

துகிளுரிக்கப்படும் எங்கள் அவலநிலையை பார் !

மலராய் நாங்கள் மலரும்முன் மொட்டகவே எங்களை கருகவிட்டுவிடு !

 

அல்லது எங்களை தொட்டால்

அவன் எறிந்துவிடுவான் என்றொரு வரமாவது  பிட்சையாக தா !

 

ராமனின் ஜானகியை தன்னோடு சேர்த்துக் கொண்ட பூமித்தாயே

கயவன் எனது கூந்தலை பற்றும்போதே

 பூகம்பமாய் வந்து என்னை விழுங்கிவிடு !

 

நீ எங்களுக்கு தந்த ஒரே ஆறுதல்

பெண்ணை சதை மலராய் பார்க்காத சில ஆண்கள் தான் !

 

துச்சாதனன் எனும் ஆணால்  துகிளுரிக்கப்பட்டாள்  பாஞ்சாலி

மாதவன் எனும் ஆணால்  காக்கவும் பட்டாள்  அவள் !

 

ராவணன் எனும் ஆணால்  கடத்தப்பட்டாள்  சீதை

ராமன் எனும் ஆணால்  ரட்சிக்கபட்டாள்  அவள் !

 

இதன் மூலம் தேவம் சொல்லவரும் நீதி என்ன ?

 

ஆண்களால் அபாயமும் உண்டு

ஆண்களால் அபயமும்  உண்டு என்றா ?

 

அப்படி என்றால் இத்தகையே ஆண்களை நான் போற்றிதானே ஆக வேண்டும்?

 

அலுவலகத்தின் அதிகநேரம் வேலை செய்கையில்

அக்கறையாய் பாதுகாக்கும் அலுவலக காவலர் ,

 

கண்ணீரில் தோள்  சாயும்போது

அதை சாதகமாக்கி கொள்ளாத காதலன் ,

 

நேரம் காலம் இல்லாமல் நடுஇரவில் பேசினாலும்

கல்மிஷம் இல்லாமல் கண்ணியம் காட்கும் நண்பன் ,

 

பிரசவத்திற்கும் அறுவை சிகிச்சைக்கும் வரும் நோயாளிகளை  

காமத்துடன் காணாத மருத்துவன் ,

 

யார் என்று தெரியாமல் பொது இடத்தில் உதவிட்டு

ஒரு நன்றிக்கு கூட புன்னகையை மட்டும் பதிலாய் சிந்திவிட்டு

 

சாலையை கடக்கும் சாதாரண குடிமகன்,

இவர்களை நான் போற்றிதானே ஆகவேண்டும் ?

 

கொதித்து கொண்டிருக்கும் எரிமலையாய் பெண்மனம்

அதை பாகாய்  உருகவைப்பது ஆணின் கண்ணியமும் காவலும் தான் !

 

இன்றும் கண்ணியம் தவறாமல்

என்னை பெண்ணியவாதி என்று முத்திரையிடாமல்

 

சமூகத்தில் சரியான பார்வையில் நோக்கும்

என் பாரதி குடிகொண்டிருக்கும் அனைத்து

ஆணுள்ளத்திற்கும் எனது நன்றி !

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.