(Reading time: 2 - 3 minutes)

 09. ராதா கிருஷ்ணன் காதல் - முடியட்டும் ராதையின் பந்தம் - புவனேஸ்வரி

Krishnar

கண்ணனின் லீலையை கேளாயோ தோழி

என் கண்ணனின் லீலையை கேளாயோ தோழி !

 

என்னிடத்தில் இன்னொருத்தி பெயர் உரைப்பான்

நான் கண்ணீர்விடும் முன்னே என் துயர்துடைப்பான் !

 

என் அகத்தில் அவனது வதனம் விதைப்பான்

நான் வார்த்தையில் அதை கூறினாலோ எள்ளி நகைப்பான்  !

 

அங்கும் இங்கும் மறைந்திருந்து தேட வைப்பான்

என் காதல் கொண்ட கண்களையும் வாட வைப்பான் !

 

நியாயம் தானா என் கண்ணா என்று கேட்டால்

கன்னம் காயமெல்லாம் சௌக்கியமா என்றே முத்தமிடுவான் !

 

கோபமோ அவன் மீது வருவது இல்லை

என் தாபமோ அகத்தில் இருந்து தீர்வதும் இல்லை !

 

அவன் என்னென்ன செய்தாலும் ரசிக்கின்றேன்

நான் கண்ணனின் காதலிலே திளைக்கின்றேன் !

 

கண்முன் நின்றாலும் தூரம் ஆகிறான்

கண்காணா வேளையிலும் அன்பால் அணைக்கிறான் !

 

என்ன தவம் செய்திருந்தான்

எப்படி அனைவரின் காதலையும் பெறுகின்றான் ?

 

அன்பின் அமுதசுரபியாய் தெரிகிறான்

என் அகத்தில் குடிகொண்ட மாதவனே !

 

நினைக்கும்போதே இனிக்கின்றான்

மறக்க முடியாமல் தித்திக்கின்றான் !

 

இணைந்துவிட்டேனடி அவன் இதயகூட்டுக்குள்

ஏக்கம் ஏதடி  அவன் கரங்களின் சிறையினுள் ?

 

போதுமடி இந்த ஜென்மம்

பெற்றுவிட்டேன் சர்வ சுகந்தம் !

 

கள்வனின் காலடியில்

தொடங்கி முடியட்டுமே  ராதையின் பந்தம் ..!

Ratha Krishnan kathal - 08

Ratha Krishnan kathal - 10

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.