(Reading time: 2 - 3 minutes)

கண்ணனின் துரோகம் .. ! - புவனேஸ்வரி 

Radha Krishna

எந்நேரமும் எனை வருடும் காற்றே கேட்பாயாக

இருளிலும் எனை பிரியா இசையே கேட்பாயாக

 

எப்போதும் என்னில் மயங்கும் எழிலுலகே கேட்பாயாக

கண்ணன் ராதைக்கு இழைக்கிறேன் துரோகம் ..!

 

நேசவிதிகளில் தலை சிறந்தவள்

பாசத்திற்கு அளவுகோள்  காட்டாத என்னவள்

 

இருளிலும் எனை சூழ்ந்த நிழல் அவள்

அருகில் இருக்கும்போதே விரகம் உணர்பவள் 

 

எமையே உலகென நினைத்த ஸ்திரீக்கு

கண்ணன் தருகிறேன் உயிர்வலி ! 

 

பிரியவேண்டுமாம் ..

கண்ணனாகிய நான் கடமைக்கு பணிந்து 

இம்மண்ணை பிரிகிறேன்

என்னையே பிரிகிறேன்

என்னையே உயிராய் பாவித்த பெண்ணையும் பிரிகிறேன்  !

 

பிரிவென்பதே இல்லையென வரம் தந்தேனே

வரமெல்லாம் காற்றில் கலந்து மறந்ததோ ?

என் ராதையின் அசரீரி உயிர்வரை பாய்கிறதே !

 

தன்னுயிரை விட அதிகமாய் எனை நேசித்த சகியின்

விதியென , விதிமேல் பழி உரைப்பேனோ ?

 

கடமைக்காக காதலை துறந்தேன் என

கண்ணனே பழியேற்றிடவா  ?

 

பழியை பொறுப்பாளா என் ராதை ?

கண்ணனின் இன்பம் ராதையின் இன்பமெனில்

கண்ணனின் துன்பம் ராதையின் துன்பமெனில்

கண்ணனின் பழி ராதையின் பழியல்லவா ?

 

ராதே ..! ராதே !

கிருஷ்ணா கிருஷ்ணா என மயக்கும் உன் குரல்

இனி கேட்டிடாமல் வீழ்வேனோ ?

 

போ கண்ணா ..எனும் உன் சிணுங்களில்

சிலிர்க்காமல் மறைவேனோ

 

உன் பாதை படாத பாதையில்

கண்ணனின் புரவியும் பயணிக்குமோ ?

 

ராதை சுவைக்காத உணவு

கண்ணனின் நாவை தீண்டிடுமோ ?

 

ராதையின் மடி சாயாத கண்ணனின் சிரம்

புவியின் பாரம் தாங்கிடுமோ ?

ராதையின் முகம் காணா  விழிகள்

பிறர் முகத்தை கண்டிடுமோ ?

 

ராதையை சீண்டாத கண்ணனின் குறும்பு

இனி பிறர் காண இருந்திடுமோ ?

 

எதிர்பார்ப்பில்லாமல் என்னவள் ஆகினால்

இன்று , அவள் எண்ணங்களின் எதிரியா நான் ?

 

ராதை மன்னித்தாலும் ,

கண்ணனை கண்ணன் மன்னிப்பேனோ ?

 

செல்கிறேன், என் சகியிடம்

சரணடைகிறேன் எனதன்பின் வசிப்பிடத்தில்

உறைந்துவிடுகிறேன் என் ப்ரியசகியுடன்

பிரிவை எதிர்க்க செல்கிறேன்

ராதையிடம் !

Ratha Krishnan kathal - 11

Ratha Krishnan kathal - 13

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.