(Reading time: 2 - 3 minutes)

வாழ்த்தலாம் வாங்களேன்... - தங்கமணி சுவாமினாதன்

அவன் வசீகரன்...அவள் சுந்தரி...
 
இன்று இருவருக்கும் இனிதாய்த்--
 
திருமணம்...
 
வாழ்த்தலாம் வாருங்களேன்......
 
வசீகரா...உலகத்து ஆண்கலெல்லாம்- ஒரு
 
பெண்ணைத்தான் மணம் கொள்வர்-ஆனால்..
 
நீயோ ஒரு கவிதையை அல்லவா
 
மணந்திருக்கிராய்...
 
சுந்தரி=அழகானவள் என்பது பொருள்..
 
அழகைக் கண்டால் முனிவனும் கவிஞனாவான்..
 
நீயோ ஒரு இளைஞன்,இனியவன்,ரசிக்கத்தெரிந்தவன்..
 
காதல் "கவிதை"பாட உனக்குக் கற்றா தரவேண்டும்..
 
சுந்தரி மன்னர்கள் காலத்து "மரபுக்"கவிதை..
 
அவள் புதிதாய்ப் பூத்த "புதுக்கவிதை"..
 
சின்னதாய்ப் பேசி சிந்திக்கச் செய்யும்..
 
அர்த்தம் பொதிந்த "ஹைகூ"வும் அவளே..
 
மொத்தத்தில் சுந்தரி ஒரு "கவிதைச் சோலை"
 
மஞ்சள் தடவிய சின்னக் கயிற்றால் காதல் மலரும்
 
"கவிதைச் சோலையை"சிட்டா எழுதி "பட்டா"செய்து..
 
மாயம் செய்து மணந்து கொண்டாயே...
 
சின்னப் பயலே நீ ஒரு பொல்லாப் பயல்தான்..
 
உந்தன் சொந்த "கவிதைச் சோலையில்"-வானத்து
 
நிலவுக்கு என்றும் விடுப்பே இல்லை..
 
அங்கு தென்றல் வந்து சுகமாய் வீசும்..
 
வண்ண மலர்கள் வாசம் சேர்க்கும்...
 
ஊசித் தூரல் பன்னீர் தெளிக்கும்...
 
கருப்புக்குயில்கள் கானம் பாடும்...
 
காதல் கிளிகள் பாடிப் பறக்கும்..
 
மானும் முயலும் துள்ளித் திரியும...
 
இயற்கையே உங்களை இணைத்து மகிழும்..
 
நீயும் அவளும் அவளும் நீயும் ஆனந்தக் கடலில்..
 
மூழ்கி மூழ்கி...இன்பத்தேனை அள்ளிப் பருகி..
 
முத்தான முத்துக்களைக் கையெடுத்து வாருங்கள்..
 
நீங்கள் தரும் முத்துக்கள் வாங்க..
 
சோலையின் வாசலில் தவமாய் நாங்கள்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.