(Reading time: 2 - 4 minutes)

கோகுலக் கண்ணா வா வா..குட்டிக் கண்ணா வா வா... - தங்கமணி சுவாமினாதன்

Kannan

அதோ பாரு...அதோ பாரு கண்ணன் வருகிறான்...

குட்டிக்... கண்ணன் வருகிறான்..

முட்டி போட்டுக்... கைகள் ஊன்றி கண்ணன் வருகிறான்..

கண்ணன்.... தவழ்ந்து வருகிறான்...

அவன் நிறத்தப் பாரு நிறத்தப் பாரு ..

நீல வண்ணமாம்..அவன் நீல வண்ணனாம்..

அவன் முகத்த பாரு... முகத்த பாரு--- நிலவும் 

குனியுமாம்..வெட்கத்தில் ..நிலவும் குனியுமாம்..

சிப்பப் பாரு சிரிப்பப் பாரு கொவ்வை இதழிலே..

பார்க்கும்... மனசெல்லாம் கொள்ளை போகும் 

அடுத்த நொடியிலே..அவன்... அழகு சிரிப்பிலே..

அவன் இடுப்ப பாரு இடுப்ப பாரு...கொடியும் ஜொலிக்கிது

அரைஞாண் கொடியும் ஜொலிக்கிது..

ஜொலிஜொலிக்கும் அதனைப் பார்க்க..கண்கள்..

மயங்குது..நம்மின் கண்கள் மயங்குது..

அவன் காலைப் பாரு காலைப் பாரு கொலுசு சிரிக்கிது..

தண்டைக் கொலுசு சிரிக்கிது..அது கலகலக்கும் ஓசையிலே

வேதம் ஒலிக்கிது நான்கு வேதம் ஒலிக்கிது..

அவன் தலையப் பாரு தலையப் பாரு..

பீலி இருக்குது மயிற்பீலி இருக்குது....அது..

அங்குமிங்கும் ஆடி ஆடி ..நம்மை மயக்குது..ஆடி

நம்மை இழுக்குது...

Kannanகழுத்தைப் பாரு கழுத்தைப் பாரு மணிகள் தவழுது..

முத்து.. மணிகள் தவழுது...அது கர்வத்தோடு..

நம்மைப் பார்த்து கண்ணைச் சிமிட்டுது..குறும்பாய்க்

கண்ணைச் சிமிட்டுது...

அவன் குட்டிக் கால்கள் உதைக்க... ஒருத்தன்

காணாப் போனானே....

அவன் பிஞ்சுக் கைகள் அடிக்க.... ஒருத்தன்..

பிஞ்சே போனானே..

அவன் "வாயை" வைக்க அரக்கி ஒருத்தி..

மாண்டு போனாளே...

அவன் காலடியில் பாம்பரசன் அடங்கி  நின்றானே..

காளிங்கன் வணங்கி நின்றானே... 

அவன் வாய் திறந்து "உலகத்தையே"...காட்டி நின்றானே..

யசோதைக்குக்.... காட்டி நின்றானே..

Kannanஅவன் வீடு வீடாய் நுழைந்து நுழைந்து--- வெண்ணை..

தின்றானே..வெண்னையைத்... திருடித் தின்றானே..

திருடித் தின்ற வீட்டுக்குத்தான்..வளமும் சேர்த்தானே..

பலப் பல நலமும் தந்தானே...

புன்னை மர நிழலில் நின்று..புல்லாங்குழல் ஊதி..ஊதி..

கோபியரின் மனதையெல்லாம் கொள்ளையடித்தானே..

மாயக்... கண்ணன்.. கொள்ளையடித்தானே..

அவன் வானத்துக்கும் பூமிக்குமாய்... வளர்ந்து நின்றானே...

உருவம் கொண்டானே..ப்ரம்மாண்ட உருவம் கொண்டானே..

அந்த மாயக்கண்ணன்... நம் இல்லம்... என்று.. வருவானோ?

குஞ்சுக் கால்கள் பதியப் பதிய... இன்று வருவானோ? 

கோகுலக் கண்ணன்... இன்று வருவானோ?

குட்டிக்கண்ணா.... வா வா..செல்லக்கண்ணா... வா வா...

மாயக்கண்ணா வா வா..உன் அருளை அள்ளித் தா..தா.. 

இன்று (05-09-2015.)கண்ணன் பிறந்த நாளான கோகுலாஷ்டமி என்பதால் கண்ணனுக்காக இக்கவிதையை(?) எழுதினேன்.இந்த நன் நாளில் சில்சீயின் அன்பு வாசகர்கள் அனைவருக்கும் எனது கோகுலாஷ்டமி நல் வாழ்த்துக்கள்.கண்ணனின் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்.
நன்றி...

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.