திருடர்கள் - அமீர்
ஐயா...
கொஞ்சம் நில்லுங்கள் என்றேன்
யாரும் நிற்கவில்லை!
நண்பா...
கொஞ்சம் நில்லுங்கள் என்றேன்
யாரும் நிற்கவில்லை!
சகோ...
கொஞ்சம் நில்லுங்கள் என்றேன்
யாரும் நிற்கவில்லை!
தலைவா...
கொஞ்சம் நில்லுங்கள் என்றேன்
யாரும் நிற்கவில்லை!
ஆனால்
எனக்கு முன்னும் பின்னும்
சென்ற
அத்தனை பேரும்
இப்போது
நின்று என்னை பார்க்கிறார்கள்!
கீழே கிடக்கிறது
ஆயிரம் ரூபாய்
கொஞ்சம் நில்லுங்கள்
யாருடையது சொல்லுங்கள்
என்றதால்.