(Reading time: 1 - 2 minutes)

மழைலை - மாது

mazhailai

இட் இட் டீ,   தா தா

ப்..பா,  ம்ம்.......ம்ம்மா

அரை குறையான

அழைப்பு

 

பொக்கை வாய்

திறந்து

சொக்க்க்க வைக்கும்

சிரிபபு

 

காலை  அவசரமோ

மாலை  அசதியோ

கவர்ந்திடுமே கை, கால்

உதைப்பு

 

டிவி, மற்றும் ஐ பாடில்

கட்டுண்டவர்கள்

கவனதை திருப்பும்

ஈர்ப்பு

 

வேளை தவறாமல்

தன் தேவை கொள்ளும்

வீ...ல்..ல்..ல்  எனும்

வீராப்பு

 

அப்பாவின் அடியும்

அம்மாவின் கண்டிப்பும்

மத்தவருக்கு தந்த

இறுமாப்பு

 

குறும்புகள் செய்து

இரும்பு இதயம்தனை

தன்பால் திருப்பும்

அரும்பு

 

அண்டை அயலார்

சொத்தாம் தங்கள்

வீட்டு கண்ணனின்

குறும்பு

 

மணி, நாட்கள்

வாரம் மற்றும் வருடம்

போவது தெரியாமலே

களிப்பு

 

வீட்டினின் சொத்தாய்

வந்தமைந்து,

பூலோகத்தை

சொர்கமக்கிடுமே

 

எங்கள்......

அல்ல  அல்ல

எல்லோர் இல்லத்து

ம ழ லை

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.