அருமருந்து - ஷிவானி
நிறமில்லாத தேவதை நீ!
உலகை செழிக்க செய்யும் அழகி நீ!
தாகத்தை தீர்க்கும் தாய் நீ!
தேவையெல்லாம் தீர்க்கும் தந்தை நீ!
பூமியில் உலாவும் நிழல் இல்லாத அதிசயம் நீ!
உலகையே ஆட்கொள்ளும் சக்தி கொண்ட ஒரே உயிர் நீ!
முக்தியைதரும் முழுமையான நிலை நீ!
மண்ணின் மேல் உயிர்கள் அனைத்தையும் வாழவைக்கும் கடவுள் நீ!!!
{kunena_discuss:779}