(Reading time: 1 - 2 minutes)

வாழ்க்கைப் பயணம் - கல்பனா

life

வாழ்க்கைப் பயணம்

புதிரானது மட்டும் அல்ல

புரியாதது புதிதானது.

கடந்து செல்லும் போது

எதிர் காலம் குறித்து

என்னென்னவோ கனவுகள்

கோடிகளில் சில நூறுகள்

கனவின் பாதையில்

எச்சமான மிச்சமோ

ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய்

ஆனாலும் எல்லாம் சுகமே

பயண இறுதியில்

திரும்பி பார்க்கையில்

சில சந்தோஷமாய்

சில கண்ணீராய்

சில வெறுப்புகளாய்

சில அந்தரங்கமாய்

ஒரு பக்கத்தில் இருந்தவர்கள்

அடுத்த பக்கத்தில் இருப்பதில்லை

விந்தையான ஒன்று

ஒருவர் மற்றவரை சந்தித்ததும் இல்லை

ஆனாலும் இவை அனைத்தும்

யாரும் பார்க்க முடியாத

திருட முடியாத

என்னுடைய பொக்கிஷங்கள்

என் நினைவுகள்.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.