மாப்பிள்ளை சந்தை – ஸ்ரீவள்ளி
என் கண்ணனே,
கோடிகளுக்கும் பவுன்களுக்கும் கிலோக்களுக்கும்
காருக்கும்
விற்று போனாயே
மாப்பிள்ளை சந்தையில் .....
தன்னை தானே விலை சொல்லி விற்கும் அவலம்
இவ்விஞ்ஞான உலகிலும்.......
காதலை வளர்த்த பெருமை
மட்டுமே கைபேசிக்கு...
பெண் வீட்டை தலையசைக்க செய்தது பலமுறை
ஆண் தட்சணையே........
கன்னியர் விடுதலை கண்டு வானோக்கி சென்று விட்டோம்...
காளையரே !!!! உங்கள்
விடுதலையை எதிர்நோக்கி காத்திருங்கள்......
{kunena_discuss:779}