(Reading time: 1 - 2 minutes)

ஏய்... சண்டகாரா! - சாஷ்னி

Hey sandakara

என்னை விதையாய் விதைத்திடு

பயிராய் வளர்த்திடு

என் அருகினில் வந்திடு

வண்டாய் சுற்றிடு

மலராய் வட்டமிடு

உன் இமைகளை அசைத்திடு

என்னை நாணப்படுத்திடு

நீ என்னிடம் கெஞ்சிடு

என் கண்ணம் கில்லிடு

என் குழலை இழுத்திடு

என்னைச் சிணுங்க செய்திடு

என் இடையை வளைத்திடு

என் இதழில் கோலமிடு

உன் இதழால் தீண்டிடு

என் உடலைச் சில்லிடு

பனியாய் என்னை உருக்கிடு

பாணமாய் என்னை பருகிடு

நீ நித்தம் கொஞ்சிடு

என் மனதை கொய்திடு

என்னிடம் செல்லச் சண்டையிடு

உன் மனதினில்! சிறையிடு

சிறகாய் என்னை இணைத்திடு

பறவையாய் பறந்திடு

நீ தூரமாய் விலகி(டு)

என்னை திகைக்க செய்திடு

என்னை உணரச் செய்திடு

என் அழைப்பினில் திரும்பி வந்திடு

உன் வருடலில் என்னை கொன்றிடு

குறைகளை என்னிடம் சொல்லிடு

நிறைகளை பாராட்டிடு

உன் அன்பால் என்னை வென்றிடு!

 

DEAR readers thanks for the appreciation. I would like to thanks joshni for writing this poem. Because after reading title I hummed the hey sandakaara song and thought of why don’t we think of poem by keeping this word as starting. So first I written whatever I thought and rearranged somewhat slightly meaningful. Thank you and take care.

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.