(Reading time: 2 - 3 minutes)

தாய்மை - முஹம்மது காசிம்

Mother

தாயே 

உன் 

கஷ்டத்திற்தக்கும்

முன்

என்

பிறந்த நாளை

கொண்டாட

நான் தகுதியில்லை !

 

தத்தி தத்தி தவழ்ந்த

போது

உன்னுடைய 

கவனம் 

தவறியத்தில்லை !

 

அடி மீது அடி வைக்கும்

போது

தடுமாறி விழும் போது

உன் தாலாட்டுகள்

ஒய்ந்ததில்லை !

 

நான் 

உண்ண மாறுத்த

போது

உண் கைகளில் இருந்த

உணவு

வீணாகி பார்த்தில்லை !

 

துன்பம் 

உன்னை

துவண்ட போது கூட

துணி

துவைக்காமால் 

இருந்ததில்லை !

 

நீ

பசியோடு

இருக்கயிலே

உன்

பல பிள்ளை இருந்தாலும்

ஒரு பிள்ளைக்கும்

பாகுபாடு 

பார்த்ததில்லை !

 

இந்த

உலகத்தில்

இறக்கத்திற்க்கு

பெயர் சொல்ல

உன்

பெயரை தவிர

எனக்கு உச்சரிக்க

வார்த்தையில்லை !

 

நான் 

தேர்வு எழுத 

படிந்த இருந்த காலமெல்லாம்

நீ எழுதுவது போல்

இரவாய்

இருந்த போது

நீ தூங்கியதை

நான்

காணவில்லை !

 

என்னுடைய

கோபம் 

உன்னை தாக்கும் போது கூட

நீ எனக்கு

கடமை செய்ய

குறை

வைத்ததில்லை !

 

என் கண்களில் 

நீர் 

வடிந்தால்

உன் முந்தனைகள்

ஒய்வதில்லை !

 

என்

பருவ காலம் கடந்தாலும்

உன்

பணிகள் 

ஒய்வதில்லை

தாயை உணராதவனுக்கு

இது

தெரிவதில்லை !

 

தெய்வத்தை கூட

கல்லில் தான்

பார்க்கிறார்கள்

ஆனால்

உன் பாதத்தில்

சுவர்க்கம் இருக்கிறதை

தவிர

வேறு சுகத்தை

நான்

காணவிரும்பவில்லை !

 

உன்னை போல் 

பல தாயை

முதியோர் இல்லத்தில்

விடுபவர்களை

கேட்கயிலே

என்னவொன்று

சொல்வது என்று

எனக்கு

தெரியவில்லை !

 

உன்னுடைய தியாகத்தை

நினைக்கும் 

நேரமெல்லாம்

என் கண்ணீர்

ஒய்வதில்லை !

 

கடந்த காலத்தை

நினைக்கயிலே

மறு 

ஜென்மாயி பிறக்க

நான் விரும்ப வில்லை

உனக்கு 

முதல் ஜென்மாயி

இருந்து

சேவை செய்ய

ஆவலோடு 

இருக்குகின்றேன் !

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.