(Reading time: 1 - 2 minutes)

அய்யோ பாவம் அரசியல்வாதிகள் !! - அப்துல் காதர் ஹசனி

eagle

மக்கள்,
அரசியல் சேற்றில் 
செத்து மிதக்கும் 
சோதனை எலிகள்!

அரசியல்வாதிகள்,
சாவு களத்தையும் 
சாதகமாக்கும் 
சாதனை புலிகள்!

அரசியல் 
சாசனங்களை விட 
அரசியல்வாதிகளின் 
ஆசனங்கள் 
வலிமை வாய்ந்தவை !

மரங்கொத்தி 
பறவைகளாய் 
சுரண்டலை 
தொடங்கும் 
அரசியல்வாதிகள் 
பிணந்தின்னி 
கழுகுகளாய்
மாறிவிடுகிறார்கள் !

ஊழல் செய்யும் 
அரசியல்வாதிகளை
பெருச்சாளிகளோடு 
ஒப்பிடாதீர்கள் !
பெருச்சாளி
தன்னை 
தற்காத்துக்கொள்ள 
மண்ணில் தான்
பொந்திடுகிறது !
அரசியல் வாதியோ 
தன்னை காப்பாற்ற 
சட்டத்திலே
பொந்திடுகிறான்!

பெருச்சாளிகள் 
வயிற்றுப்பசிக்காக 
மட்டுமே 
வளைய வருகின்றது!
அரசியல்வாதிகளோ
பணப்பசிக்காகதான்
வளைந்து வருகின்றார்கள் !

அரசியல்வாதிகளை
நச்சு பாம்புகளோடு 
ஒப்பிடாதீர்கள் !

பாம்புகள் உயிரை காக்க 
எதிரிகளை மட்டுமே 
கொட்டுகின்றது!
அரசியல்வாதிகள் 
பதவியைகாக்க 
நண்பர்களையே 
கொட்டுவார்கள் !

பஞ்சோந்தி 
தன் நிறத்தை மட்டுமே
மாற்றிகொள்கிறது 
அரசியல்வாதியோ
சுற்றி இருப்பவர்களின் 
நிறங்களையும் 
சேர்த்து மாற்றுகிறான்!

நேர்மையான
அரசியல்வாதிகளே ! 
இன்றைய 
அரசியல் அவலத்தை தான் 
சுட்டிக்காட்டினேன் !
நீங்கள் கோபப்படாதீர்கள் !

{kunena_discuss:779} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.