(Reading time: 2 - 4 minutes)

பெண்கள் தினமாம் - ஷக்தீ 

Women

நான் பெண்; இவ்வுலகில் ஆணான உன்னுடன் இணைந்து வாழ வந்தேன்; உன் இச்சைக்காக வாழ வரவில்லை;

நீ என்னை பாதுகாக்க வேண்டாம்; நீ பாதுகாக்கிறேன்பது உன் இனத்திடத்திருத்தே என்பதை உணர்த்தால் போதும்; மற்றபடி காட்டில் வாழும் சிங்கத்திற்கு நீயொ நானோ சிற்றுணவுதான்!

உலக அழகி கீரீடத்தை சுமப்பதை விட, 
உழைத்து களைத்த கருமையில் அழகாய் தெரிவேன்; ஆனால் அந்த அழகு உன் கண் படாது!

திரையில் என் அங்கங்களை அணு அணுவாய் காட்டிய போது யார் கண்ணும் முகமும் மனதும் சுளித்ததோ அவன் மட்டும் கர்சிப் கட்டு்வேன் என்றபோது கேள்வி கேட்கட்டும்!

உன் தங்கை ஆடை நெகிழும்போது கழுத்துவரை போர்த்தி செல்லும் நீ
என் ஆடை குறைந்ததால்தான் என்னை குலைத்தேன் என்பதில் நியாயமில்லை

ஆண்டில் ஓர் நாள், நான் இந்நாட்டின் கண்கள் போற்றவும் வேண்டாம்; மற்றைய நாட்களில் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் குத்துங்க எஜமான் என்று கத்தியெடுக்கவும் வேண்டாம்!!!

இன்று ஒரு நாளேனும்

காசுக்காக கற்பு காணாமல் போக வேண்டாம்

அனிச்சையாய் ஆடையின்றி வெளியே வந்த மூன்று வயது குழந்தை பத்திரமாய் வீடு செல்லட்டும்

பெண்ணாய் பிறந்தற்காக சமையலறை பத்திரத்தை பதிவு செய்து கொடுக்க வேண்டாம்

வரதட்சணை சந்தை விலைமகனை தவிர்த்து ஆண்மகனை மாலையிடட்டும்

சுடிதார் துப்பட்டாவுடன் செல்லும் பெண்ணேனும் பார்வையினால் துச்சாதனம் செய்யப்படாமல் இருக்கட்டும்.

அண்ணாவேன அழைக்கும் பத்து வயதுப்பெண் அணைக்கப்படாமல் இருக்கட்டும்.

சாதித்தாலும் எதை காட்டி ஜெயித்தாளோ என தூற்றப்படாமல் இருக்கட்டும்

நீ மட்டும் சரியா எனச் சுட்டு விரல்
நீட்டப்படாமல் இருக்கட்டும்

என் முண்டாசு கவியின் கனவுகள் 
நிஜமாகட்டும்

பிடிக்காதவைகள் கட்டாயமாக திணிக்கப்படாமல் இருக்கட்டும்

மதம், கற்பு என ஆப்பிரிக்க சகோதரியின் பிறப்புறுப்பு தைக்கப்படாமல் இருக்கட்டும்

வருடத்தில் அனைத்து நாட்களிலும் என்னை வாழ்வின் அங்கமாய் பார்த்த சகோதரனுக்கும் தோழனுக்கும் நன்றி!!!

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.