(Reading time: 2 - 3 minutes)

பெரியவடக்கம்பட்டி தங்கவேலு - வின்னி

Thangavelu

தமிழ் நாட்டுக்கு பெருமை தேடித் தந்த பெரு மகனே!

பெரியவடக்கம்பட்டி கிராமத்தையே,

 உலகறியச் செய்த பெரிய மகன் நீ அல்லவா !

உயரப் பாயும் பந்தயத்தில் தங்கம் பெற்ற தங்க மகன் தங்க வேலுவே !

நீ உயரப்  பறந்து வீட்டாய் , பரா ஒலிம்பிக்ஸில்!

உன் விடா முயற்சிக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்  என் அருமை நண்பனே!

ஐந்து வயதில் உன் கால் ஒன்று குடிகார சாரதியின் லாரியில்  நசிவுண்டது,

ஊனமில்லை உன் கால்கள் என்று, பறைசாற்றும்  உன் சாதனை! 

குடிப்பவன்தான் ஊனமுள்ளவன் என்று  சொல்லும் உனது செய்கை!   

வாழ்வில் பட்ட பெரும் துயரத்தை பெருமையாக்கி விட்ட தமிழனே!

இளம் பிராயத்திலேயே உன் தந்தை  உன்னைக் கைவிட்டு  ஓடி விட்டான்,

ஏனென்று நானறியேன்?

வருவான் நிச்சயம்,  உன் புகழ் கேட்டு., மாரியப்பன் என்ற அவன் பெயரையும் நீ செய்தாய் உலகறிய!   

நாலு பிள்ளைகளை, கல் தூக்கி, மரக்கறி விற்று, தந்தை இன்றி, காப்பாற்றினாள் உன் தாய். அவள் பெருமை உலகறிய செய்தாய்.

அந்த தெய்வமகளுக்குத்  தலை வணங்குகிறேன்!

உன் பட்டப்படிப்பை முடித்துவிட்டால் போதாது என்றெண்ணி உயர் படிப்புப் படிக்க நினைக்கும் உன் எண்ணத்தை மற்றைய  இளம் சந்ததியினரும் ஒரு பாடமாக எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

பெருமையிலோ அல்லது அகங்காரத்திலோ உன் தலையை மேலே நிமிர்த்தாதே!

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுபவ னு ம் தனது தலையைக் கீழே  குனிந்தால்தான் அவ னு க்குப் பதக்கம் கிடைக்கும்

அதுதான் வயதில் பெரியவன் நான் தரும் ஒரு அறிவுரை!  

நீ அதை அறிவாய் என்று எனக்குத் தெரியும்!

தங்கப் பதக்கம் பெற்றவன் நீ அல்லவா!   

 

{kunena_discuss:779}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.